For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆம் ஆத்மிக்கு தாவிய காங்கிரஸின் 18%, பாஜகவின் 11% வாக்காளர்கள்- ஐபிஎன் கருத்து கணிப்பு

By Mathi
|

டெல்லி: அரவிந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மிக்கு காங்கிரஸ் கட்சியின் 18% வாக்காளர்களும் பாஜகவின் 11% வாக்காளர்களும் தாவியிருப்பதாக ஐபிஎன் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் நாட்டின் 18 மாநிலங்களில் ஐபிஎன் தொலைக்காட்சி பல்வேறு தலைப்புகளில் கருத்துக் கணிப்புகளை நடத்தி வெளியிட்டு வருகிறது. இதில் தேசிய அளவில் ஆம் ஆத்மி கட்சியின் தாக்கம் எப்படியாக இருக்கும்? ஆம் ஆத்மிக்கு எந்த சமூகத்தினர் வாக்களிப்பர்? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் ஐபிஎன் கருத்து கணிப்பு நடத்தியிருக்கிறது.

இதர கட்சிகளிடம் இருந்து ஆம் ஆத்மிக்கு பிரியும் ஓட்டுகள்? அரவிந்த் கேஜ்ரிவால் பிரதமராக ஆதரவு உண்டா? என்பது குறித்தும் இக்கருத்து கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.

ஆம் ஆத்மிக்கு தாவும் கட்சிகளின் வாக்குகள்

ஆம் ஆத்மிக்கு தாவும் கட்சிகளின் வாக்குகள்

தேசிய அளவில் எந்தெந்த கட்சிகளின் எத்தனை சதவீதம் வாக்குகள் ஆம் ஆத்மிக்கு தாவும் என்ற கேள்விக்கு காங்கிரஸின் 0.7%, பாஜகவின் 0.5%. இதர கட்சிகளின் 2.8% வாக்குகள் பிரியும் என்று கூறப்பட்டுள்ளது.

அதாவது காங்கிரஸ் கட்சிக்கு முன்பு வாக்களித்தோரில் 18%, பாஜகவுக்கு முன்பு வாக்களித்தோரில் 11% பேர் இப்போது ஆம் ஆத்மிக்கு வாக்களித்திருக்கின்றனர்.

ஆம் ஆத்மிக்கு வாக்களிப்போர் யார்?

ஆம் ஆத்மிக்கு வாக்களிப்போர் யார்?

ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களிக்கும் வாக்காளர்கள் யார் என்ற கேள்விக்கு

சீக்கியர்கள்- 13%, நகரப் பகுதி வாக்காளர்கள் -10%, மேல்தட்டு வார்க்கத்தினர் -8%. 18 முதல் 25 வயது உள்ள இளைஞர்கள் 6%, உயர்ஜாதியினர்- 5%, இஸ்லாமியர்கள்- 5% பேர் பிரதான வாக்காளர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதேச ரீதியாக...

பிரதேச ரீதியாக...

ஆம் ஆத்மிக்கு பிரதேச ரீதியாக எப்படி ஆதரவு இருக்கிறது?

வட இந்தியாவில் 9%, மேற்கு இந்தியாவில் 5%, மத்திய இந்தியாவில் 2%, தென்னிந்தியா, கிழக்கு இந்தியாவில் தலா 1% ஆதரவு இருக்கிறதாம்.

கேஜ்ரிவால் பிரதமர் வேட்பாளர்?

கேஜ்ரிவால் பிரதமர் வேட்பாளர்?

பிரதமர் பதவிக்கு கேஜ்ரிவாலுக்கு மாநிலங்கள் வாரியாக ஆதரவு எப்படி? ..

டெல்லி- 34%, பஞ்சாப்- 12%, ஹரியானா -10%

குஜராத்- 5%, ஜார்க்கண்ட்- 5%, ராஜஸ்தான் - 4%, உத்தரப்பிரதேசம்-4%, மகாராஷ்டிரா-4%

பீகார், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் தலா 3%, கர்நாடகா, கேரளா தலா - 2%

ஒடிஷா- 1%., ஆந்திர பிரதேசம்- 1%

அசாம், மேற்கு வங்கம், தமிழகத்தில் 0% ஆதரவு என்கிறது ஐபிஎன் கருத்து கணிப்பு.

பிரதமராக யாருக்கு வாய்ப்பு?

பிரதமராக யாருக்கு வாய்ப்பு?

காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத அரசின் பிரதமராக யாருக்கு வாய்ப்பு? என்ற கேள்விக்கு

அரவிந்த் கேஜ்ரிவால்- 9%, சரத் பவார்-3%, மாயாவதி-2% நிதீஷ்குமார்- 2%. லாலு பிரசாத்-1%, மமதா-1%, நவீன் பட்நாயக்-1% புத்ததேவ்-1% ஆதரவு தெரிவித்துள்ளனர்.

English summary
Born out of the anti-corruption agitation in 2011, the Aam Aadmi Party (AAP) made a stunning debut in Delhi Assembly elections and went on to form the government with Congress's support. According to the Lokniti-IBN National Tracker poll, AAP is taking away votes from all the parties.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X