For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிரதமர் ரேஸில் 6 மாநிலங்களில் மோடி பர்ஸ்ட், ராகுல் செகண்ட்: கருத்துக்கணிப்பு

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: பாஜக பிரதமர் வேட்பாளர் மோடியின் புகழ் கடந்த ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் பிப்ரவரியில் குறைந்துவிட்டதாக கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.

சிஎன்என்- ஐபிஎன் தொலைக்காட்சி சிஎஸ்டிஎஸ் மற்றும் லோக்நிதி அமைப்புகளுடன் சேர்ந்து பிரதமர் பதவிக்கு யார் வர வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள் என 6 மாநிலங்களில் கருத்துக்கணிப்பு நடத்தியது.

6 மாநிலங்கள்

6 மாநிலங்கள்

தமிழ்நாடு, ஆந்திரா, மகாராஷ்டிரா, பீகார், உத்தர பிரதேசம் மற்றும் டெல்லி ஆகிய 6 மாநிலங்களில் உள்ள மக்களிடம் நீங்கள் யார் பிரதமர் ஆக வேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்று கேட்கப்பட்டது.

மோடி

மோடி

பாஜக பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி பிரதமராக வர விரும்புவதாக 6 மாநிலங்களைச் சேர்ந்த 31 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். கடந்த ஜனவரி மாதம் இவர்களில் 36 சதவீதம் பேர் மோடி பிரதமராக விரும்பினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்று 13 சதவீதம் பேர் விரும்புகிறார்கள். கடந்த ஜனவரி மாதம் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பின்போது 12 சதவீதம் பேர் மட்டுமே அவருக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.

சோனியா காந்தி

சோனியா காந்தி

கடந்த ஜனவரி மாத கணக்கெடுப்பில் 3 சதவீதம் பேரின் ஆதரவை பெற்றிருந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு தற்போது கூடுதலாக 1 சதீவதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

கெஜ்ரிவால்

கெஜ்ரிவால்

டெல்லி முதல்வராக பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்த ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடந்த ஜனவரி மாத கணக்கெடுப்பை போன்றே தற்போதும் 4 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மாயாவதி, முலாயம்

மாயாவதி, முலாயம்

முன்னாள் உத்தர பிரதேச முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவருமான மாயாவதிக்கும், சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவிற்கும் 4 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மன்மோகன், நிதிஷ்

மன்மோகன், நிதிஷ்

பிரதமர் மன்மோகன் சிங் மீண்டும் பிரதமராக வெறும் 3 சதவீதம் பேரே விரும்புகிறார்கள். மேலும் பிரதமர் ஆக தனக்கு தான் அதிக தகுதிகள் உள்ளது என்று கூறும் பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு 2 சதவீதம் பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஜெ மற்றும் பிறர்..

ஜெ மற்றும் பிறர்..

பிரதமர் ஆக ஆசைப்படும் தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு 8 சதவீதம் மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் 27 சதவீதம் பேர் யாருக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
According to an opinion poll conducted by CNN-IBN in six states, BJP's PM candidate Narendra Modi is leading while congress VP Rahul Gandhi comes a distant second. Though Modi is leading, his popularity has gone down.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X