
இந்தியாவில் கிராமத்தில் பிறந்த ஏழை எளியவனும் ஜனாதிபதி பதவியை அடைய முடியும்: பிரதமர் மோடி சூசகம்
கான்பூர்: இந்தியாவில் கிராமத்தில் பிறந்த ஏழைய எளியவனும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவியை அடைய முடியும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாட்டின் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரதமர் மோடியின் இந்த சூசகமான பேச்சு விவாதப் பொருளாகி உள்ளது.
திமுக, அதிமுக, காங்கிரஸ் கட்சிகளில் 6 பேர் போட்டியின்றி மாநிலங்களவை உறுப்பினர்களாக தேர்வு
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:

ஜனாதிபதி கிராமம்
கான்பூரில் ஜனாதிபதி தமது மூதாதையர் இல்லத்தை 'மிலன் கேந்திரா'வாக மேம்படுத்துவதற்கு வழங்கினார். அம்பேத்கர் பவன் பாபாசாகேப் அம்பேத்கரின் கொள்கைகளை ஊக்குவித்து வருகிறது. கிராம மக்களின் கூட்டு முயற்சியால் பாரவுங்க் தொடர்ந்து வளர்ச்சியடையும். ஒரு சரியான கிராமத்தின் முன்மாதிரியை நாட்டிற்கு முன்வைக்கும். ஒருவருடைய கிராமம் ஒருவரை அவர் எங்கு சென்றாலும் விட்டுச் செல்வதில்லை.

கிராமங்களும் காந்தியும்
மகாத்மா காந்தி இந்தியாவின் சுதந்திரத்தை இந்தியாவின் கிராமத்துடன் இணைத்து பார்த்தார். இந்தியாவின் கிராமம் என்றால், ஆன்மீகம் இருக்கும் இடத்தில், இலட்சியங்களும் இருக்க வேண்டும், இந்தியாவின் கிராமம் என்றால், பாரம்பரியங்கள் இருக்கும் இடத்தில், முன்னேற்றமும் இருக்கிறது. இந்தியாவின் கிராமம் என்றால், எங்கெல்லாம் கலாச்சாரம் இருக்கிறதோ, அங்கெல்லாம் ஒத்துழைப்பும் இருக்க வேண்டும். அன்பு இருக்கும் இடத்தில் சமத்துவம் இருக்கும். அமிர்த காலத்தின் இந்த காலகட்டத்தில், இதுபோன்ற கிராமங்களை வலுப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. கிராமங்கள், விவசாயிகள், ஏழைகள் மற்றும் பஞ்சாயத்து ஜனநாயகத்திற்காக உழைக்கும் நபர்களின் இந்த உறுதிமொழியுடன் நாடு முன்னேறி வருகிறது

ஜனாதிபதி பதவி
இந்தியாவில், கிராமத்தில் பிறந்த ஏழை எளியவனும் குடியரசுத் தலைவர்-பிரதமர் பதவியை அடைய முடியும். எல்லாத் துறைகளிலும் திறமைசாலிகளை அடக்கி, புதிய திறமைசாலிகள் வளரவிடாமல் தடுப்பது குடும்ப அரசியல்தான். எந்த ஒரு அரசியல் கட்சி மீதும், எந்த நபர் மீதும் தனிப்பட்ட வெறுப்பு கிடையாது. நாட்டில் வலுவான எதிர்க்கட்சி இருக்க வேண்டும், ஜனநாயகத்திற்காக அர்ப்பணிப்புள்ள அரசியல் கட்சிகள் இருக்க வேண்டும்.

இயற்கை விவசாயம்
குடும்பத்தின் பிடியில் சிக்கியுள்ள கட்சிகள் இந்த நோயிலிருந்து தங்களை விடுவித்து தங்களைக் குணப்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போதுதான் இந்திய ஜனநாயகம் வலுவடையும், நாட்டின் இளைஞர்கள் அரசியலில் சேர அதிகபட்ச வாய்ப்பு கிடைக்கும். கிராமத்தில் அமிர்த நீர்நிலை கட்டுவதற்கு கிராம மக்கள் உதவ வேண்டும். இயற்கை விவசாயத்தை அனைவரும் பின்பற்ற வேண்டும். தற்சார்பு இந்தியாவை அடைவதற்கான வழியை அனைவரும் முயற்சிக்கவேண்டும், தற்சார்பு இந்தியாவின் திறவுகோல் தன்னிறைவு கிராமம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். முன்னதாக ஜனாதிபதியின் மூதாதையர் கிராமமான பாராவுங்க் சென்றார் மோடி.