For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நீதிபதி லோயா பின் தலையில் தாக்கப்பட்டார்.. உடற்கூறு அறிக்கையில் மறைக்கப்பட்ட உண்மை!

நீதிபதி லோயாவின் உடற்கூறு ஆய்வு அறிக்கையில் பல உண்மையான விஷயங்கள் மறைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    நீதிபதி லோயா பின் தலையில் தாக்கப்பட்டார் .... கிளம்பிய புதிய சர்ச்சை ....

    டெல்லி: நீதிபதி லோயாவின் உடற்கூறு ஆய்வு அறிக்கையில் பல உண்மையான விஷயங்கள் மறைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அவருக்கு பின் தலையில் அடிப்பட்டு இருந்ததை மருத்துவர் வேண்டுமென்றே மறைத்துவிட்டார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

    சோராபுதீன் என்கவுண்ட்டர் வழக்கில் அமித்ஷாவை முக்கிய குற்றவாளியாக கருதி சிபிஐ நீதிமன்றம் விசாரணை நடத்தி வந்தது. இவ்வழக்கில் அமித்ஷா ஒவ்வொரு முறையும் ஆஜராக வேண்டும் எனவும் சிபிஐ நீதிமன்ற நீதிபதியாக இருந்த லோயா உத்தரவிட்டிருந்தார்.

    இது பெரிய சர்ச்சையை கிளப்பி இருந்தது. ஆனால் சர்ச்சை முடியும் முன்பே நீதிபதி லோயா திடீரென 2014-ம் ஆண்டு மரணமடைந்தார். அதன்பின் சோராபுதீன் என்கவுண்ட்டர் வழக்கில் இருந்தே அமித்ஷா அதிரடியாக விடுவிக்கப்பட்டார்.

    மாரடைப்பு மரணம்

    மாரடைப்பு மரணம்

    நீதிபதி லோயா மரணம் அடைந்ததற்கு காரணம் மாரடைப்பு என்று கூறப்பட்டது. இதற்கான உடல்கூறு பரிசோதனை அறிக்கைகள் வெளியானது. இது அவருக்கு முதல்முறை ஏற்படும் மாரடைப்பு என்றும் கூறப்பட்டது. ஆனாலும் இவர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக வழக்கு தொடுக்கப்பட்டது. தற்போது இந்த வழக்கு மீதான விசாரணை நடைபெற்று வருகிறது.

    பொய்யான தகவல்

    பொய்யான தகவல்

    இந்த நிலையில் இவர் மாரடைப்பால் மரணம் அடையவில்லை என்று ஆங்கில துப்பறியும் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டு இருக்கிறது. அதன்படி மஹாராஷ்டிரா அரசு மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர் ''மார்க்கரந் வியாவாரே'' உடற்கூறு ஆய்வு அறிக்கையில் பல உண்மைகளை மறைத்து இருப்பதாக கூறப்படுகிறது. லோயா உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்ததை அவர் மறைத்து இருக்கிறார்.

    என்ன மறைத்தார்

    என்ன மறைத்தார்

    அதன்படி லோயா உடலில் முதுகில் தாக்கப்பட்ட காயங்கள் இருந்துள்ளது. மேலும் தலையில் ஆழமாக அடிப்பட்ட காயங்கள் இருந்து இருக்கிறது. ஆனால் இந்த தகவல்கள் எல்லாம் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படவில்லை. எந்தெந்த விஷயங்களை கொடுக்க வேண்டும் என்று மஹாராஷ்டிரா பாஜக அரசு இவருக்கு ஆணை வழங்கியதோ அதை மட்டுமே இவர் கொடுத்தார் என்று கூறப்படுகிறது.

    யார் இவர்

    யார் இவர்

    மருத்துவர் மார்க்கரந் வியாவாரே 10 வருடங்களுக்கும் மேல் இதுபோல் உடற்கூறு ஆய்வு செய்து வருகிறார். இவரது உறவினர்கள் எல்லோரும் பாஜக கட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார்கள். இவரது சகோதரியின் கணவர் பாஜக கட்சியின், மஹாராஷ்டிரா எம்எல்ஏவாக இருக்கிறார். இவரின் உதவியுடன்தான் பல முக்கியமான தகவல்கள் இந்த மரணத்தில் மறைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    English summary
    Post-Mortem of Judge Loya has manipulated by a doctor under BJP guidelines says an English Investigation magazine. It says that, he died because of back head injury.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X