For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மூட்டை மூட்டையாக தங்கம், வெள்ளி குவியல் கண்டெடுப்பு... அனைத்தும் 900 ஆண்டுகள் பழமையானது!

சத்தீஸ்கரில் தங்கம், வெள்ளி குவியல்கள் கண்டெடுக்கப்பட்டன.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    900 ஆண்டுகள் பழமையான தங்க புதையல் கண்டெடுப்பு

    ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் சாலை போடும் பணிக்காக பள்ளம் தோண்டும் போது அதிலிருந்து 900 ஆண்டுகள் பழமையான தங்கம் , வெள்ளி காசுகள் கிடைக்கப் பெற்றது.

    சத்தீஸ்கரில் கண்டாகான் மாவட்டத்தில் கோர்கோட்டி மற்றும் பேத்மா ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த இரு கிராமங்களுக்கிடையே சாலை அமைக்கும் பணிக்காக திட்டமிடப்பட்டிருந்தது.

    ஊழியர் கண்டார்

    ஊழியர் கண்டார்

    இதையடுத்து கடந்த 10-ஆம் தேதி சாலை பணிக்காக ஒரு இடத்தில் பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது கொஞ்சம் அடி ஆழத்திலேயே ஒரு பானை புதைக்கப்பட்டிருந்ததை பெண் ஊழியர் ஒருவர் கண்டார்.

    சில எழுத்துகள்

    சில எழுத்துகள்

    இதையடுத்து இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் வந்து தோண்டி பார்த்தனர். அந்த பானையை வெளியே எடுத்தனர். அப்போது அந்த காசுகளில் சில எழுத்துகள் எழுதப்பட்டிருந்தன.

    12 மற்றும் 13-ஆவது நூற்றாண்டு

    12 மற்றும் 13-ஆவது நூற்றாண்டு

    அதை வைத்து பார்க்கும் போது தற்போது மகாராஷ்டிரத்தின் விதர்பாவை ஆண்ட யாதவ ஆட்சியாளர்களுக்கு சொந்தமானது என்று தெரியவந்தது. அதாவது 12 மற்றும் 13-ஆவது நூற்றாண்டை சேர்ந்ததாகும்.

    தொல்லியல் துறையிடம் ஒப்படைப்பு

    தொல்லியல் துறையிடம் ஒப்படைப்பு

    இந்த யாதவ நாடு பின்னர் சத்தீஸ்கரில் உள்ள பஸ்டர் பகுதி உள்பட 7 மாவட்டங்களுக்கு விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதையல் மேலும் ஆராய்ச்சிக்காக மாநிலத்தின் தொல்லியல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

    English summary
    Gold coins belonging to the 12th century have been found during earth-digging for a road construction in Chhattisgarh's Kondagaon district.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X