For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஷீலா தீட்சித்தை போல அதிகாரம் கொண்ட முதல்வராக உருவெடுத்த அரவிந்த் கேஜ்ரிவால்! இனி அதிரடிதானா?

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    அதிக அதிகாரம் பெரும் கெஜ்ரிவால்...இனி அதிரடி காட்டுமா?- வீடியோ

    டெல்லி: அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான டெல்லி ஆம் ஆத்மி அரசு முந்தைய ஷீலா தீட்சித் அரசு போல இனி முழு அதிகாரத்தோடு இயங்கும் வாய்ப்பை உச்சநீதிமன்றம் இன்று வழங்கிய தீர்ப்பு உறுதி செய்துள்ளது.

    டெல்லியில் அதிகபட்ச அதிகாரம் துணை நிலை ஆளுநருக்கா அல்லது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கா என்ற சர்ச்சை பல சந்தர்ப்பங்களில் வெடித்த நிலையில், ஆம் ஆத்மி தொடர்ந்த மேல்முறையீடு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற 5 நீதிபதிகள் அமர்வு, வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது.

    இதன்படி, துணை நிலை ஆளுநர் தன்னிச்சையாக செயல்பட முடியாது என்றும், டெல்லி அரசுடன் இணைந்தே செயல்பட வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    மூன்று துறைகள் தவிர்த்து

    மூன்று துறைகள் தவிர்த்து

    உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு காரணமாக அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான அரசு முந்தைய ஷீலா தீட்சித் தலைமையிலான அரசை போன்ற முழு அதிகாரம் பெற்ற அரசாங்கமாக உருவாகியுள்ளது. சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட மூன்று பிரிவுகளை தவிர மற்ற விஷயங்களில் டெல்லி அரசு தன்னிச்சையாக நடவடிக்கை எடுக்க முடியும் என்று சுப்ரீம் கோர்ட் தனது தீர்ப்பில் இன்று தெரிவித்துள்ளது

    ஷீலா தீட்சித் அரசு

    ஷீலா தீட்சித் அரசு

    இதன் மூலமா ஷீலாதீட்சித் அரசுக்கு அதிகாரம் அரவிந்த் கேஜ்ரிவால் அரசுக்கும் இருப்பதாக ஆம் ஆத்மி கட்சியின் செய்தி தொடர்பாளர் ராகவ் சத்தா தெரிவித்துள்ளார். இனிமேல் அரசு அதிகாரிகளை பணி இடமாற்றம் செய்வதற்கு ஆளுநரிடம் அனுமதி கேட்க தேவையில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    துணை முதல்வர் குற்றச்சாட்டு

    துணை முதல்வர் குற்றச்சாட்டு

    அரசுடன் இணைந்து செயல்பட லெப்டினன்ட் கவர்னர் என்றுமே தயாராக இருந்ததில்லை என்று தெரிவிக்கிறார் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், டெல்லி துணை முதல்வருமான, மணிஷ் சிசோடியா. உச்சநீதிமன்றம் இன்று அளித்த தீர்ப்பின்படி அதிகாரம் என்பது ஒற்றை நபர் சார்ந்ததாக இருக்க கூடாது என்பது தெளிவாகியுள்ளது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திடம் தான் அதிகாரங்கள் இருக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது என்கிறார் அவர்.

    கேஜ்ரிவால் வரவேற்பு

    அனைத்து துறை கோப்புகளையும் இனிமேல் கவர்னருக்கு அனுப்பி வைக்கத் தேவையில்லை. இதன் மூலம் அரசு நிர்வாகம் விரைந்து செயல்பட முடியும் என்று சிசோடியா தெரிவித்தார். இதனிடையே உச்சநீதிமன்ற தீர்ப்பை அரவிந்த் கேஜ்ரிவால் வரவேற்று ட்வீட் செய்துள்ளார் அந்தக் வீட்டில் டெல்லி மக்களுக்கு கிடைத்த பெரிய வெற்றி. ஜனநாயகத்திற்கு கிடைத்த பெரிய வெற்றி, என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

    English summary
    Arvind Kejriwal will now have same powers that Sheila Dikshit had says Raghav Chadha AAP spoke person.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X