For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோமியம் குடிச்சதால கேன்சர் குணமாச்சா? பிரக்யா சிங் சொன்னது 'பச்சை' பொய்.. போட்டுடைத்த டாக்டர்!

Google Oneindia Tamil News

போபால்: பசுவின் கோமியத்தை குடித்ததால் தமது புற்றுநோய் குணமானது என பாஜகவின் பிரக்யாசிங் தாக்கூர் கூறியது பொய் என ராம் லோஹியா மருத்துவமனை மருத்துவர் ராஜ்புத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் சிறையில் இருந்து வெளியே வந்த பிரக்யாசிங் தாக்கூர், போபால் லோக்சபா தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார். அவர் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து வருகிறார். அண்மையில் பாபர் மசூதியை இடித்ததில் தாம் முக்கிய பங்கு வகித்ததாகவும் பிரக்யாசிங் கூறியிருந்தார்.

pragya singh opted surgical treatment for cancer says doctor

அத்துடன் தமக்கு புற்றுநோய் இருந்ததாகவும் பசுவின் கோமியத்தை குடித்ததால் அது குணமடைந்துவிட்டது எனவும் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் பிரக்யாசிங் தாக்கூர்.

ஆனால் பிரக்யாசிங் தாக்கூருக்கு சிகிச்சை அளித்த லக்னோ ராம் மனோகர் லோஹியா மருத்துவமனை மருத்துவர் ராஜ்புத் இதை திட்டவட்டமாக மறுத்துள்ளார். பிரக்யாசிங் தாக்கூருக்கு மார்பக புற்றுநோய் கட்டிகள் இருந்ததாகவும் அதை மும்பை மற்றும் போபாலில் தாம் அறுவை சிகிச்சை மூலம் அகற்றியதாகவும் பின்னர் இரு மார்பகங்களையும் அகற்றியதாகவும் ராஜ்புத் கூறியுள்ளார்.

கூட்டணி கட்சி தலைவர்கள் படை சூழ...பிரதமர் மோடி வாரணாசியில் வேட்பு மனு தாக்கல்கூட்டணி கட்சி தலைவர்கள் படை சூழ...பிரதமர் மோடி வாரணாசியில் வேட்பு மனு தாக்கல்

பிரக்யாசிங் தாக்கூரின் கருத்தை முன்வைத்து சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில் மருத்துவர் ராஜ்புத்தின் விளக்கம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

English summary
Lucknow Ram Manohar Lohia Institute of Medical Sciences Doctor Rajput said that, BJP's Pragya Singh Thakur had undergone removal of both breasts to prevent recurrence of her cancer.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X