For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வாய திறந்தாலே பிரச்சனையாகுது.. 3 நாள் மவுன விரதம்.. பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் திடீர் முடிவு!

Google Oneindia Tamil News

போபால்: சர்ச்சைக்குரிய வகையில் பேசி, சிக்கல்களில் சிக்கிய போபால் லோக்சபா தொகுதி, பாஜக வேட்பாளரும், பெண் சாமியாருமான, பிரக்யா சிங், மவுன விரதம் மேற்கொண்டுள்ளார்.

மஹாராஷ்டிர மாநிலம், மாலேகான் குண்டு வெடிப்பில் குற்றம் சாட்டப்பட்டவர் பிரக்யா சிங். பெண் சாமியாரான இவர், தற்போது ஜாமினில் வெளியே வந்துள்ளார்.

சமீபத்தில் முடிந்த லோக்சபா தேர்தலில், இவர், மத்திய பிரதேச மாநிலம், போபால் தொகுதியில் போட்டியிட்டார். தேர்தல் பிரசாரத்தின் போது, சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக, பிரசாரம் செய்வதற்கு, பிரக்யாவுக்கு, தேர்தல் ஆணையம் 72 மணி நேரம் தடை விதித்தது.

பச்சை கலர் ஸ்கர்ட், சட்டைக்கு மாறும் மாணவிகள்.. பள்ளி கல்வி துறை அதிரடி பச்சை கலர் ஸ்கர்ட், சட்டைக்கு மாறும் மாணவிகள்.. பள்ளி கல்வி துறை அதிரடி

தேசபக்தர்

தேசபக்தர்

அதற்கு பிறகும் சர்சைக்குரிய வகையில் பேசுவதை நிறுத்தவில்லை பிரக்யா சிங். நாதுராம் கோட்சே குறித்து கமல் பேசியதற்கு பதிலடி கொடுப்பதாக நினைத்து, மஹாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற, நாதுராம் கோட்சே ஒரு தேச பக்தர் என்றார் பிரக்யா.

மோடி காட்டம்

மோடி காட்டம்

இது பெரும் சர்ச்சையாய் வெடிக்க எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, பா.ஜ.கவும் கண்டனம் தெரிவித்தது. பிரதமர் மோடி பிரக்யா சிங் பேசியதை ஒரு போதும் ஏற்க முடியாது என காட்டமாக கூறினார். அவரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

மீண்டும் மன்னிப்பு

மீண்டும் மன்னிப்பு

இப்படி வாயை திறந்தாலே பிரச்சனையாவதை உணர்ந்த பிரக்யா மவுன விரதம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்திருப்பதாவது,
தேர்தல் முடிந்து விட்டது. ஆத்ம பரிசோதனை செய்வதற்கான நேரம் வந்துவிட்டது. தேர்தல் பிரசாரத்தின் போது, என் பேச்சு, தேச பக்தர்கள் மனதை புண்படுத்தியிருந்தால், அதற்காக, பகிரங்கமாக மன்னிப்பு கேட்கிறேன்.

கடும் தவம்

பொது சேவைக்கான நல்லொழுக்கத்தின்படியும், செய்த தவறுக்கு பிராயசித்தம் தேடும் வகையிலும், 63 மணி நேர மவுன விரதமும், கடும் தவமும் இருந்து வருகிறேன். இவ்வாறு, பிரக்யா சிங் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் நாளில் அவர் தனது மவுன விரதத்தை முடிக்கவுள்ளார்.

மோடி தியானம்

மோடி தியானம்

தேர்தல் பிரச்சாரம் முடிந்த மறு நாளே பிரதமர் மோடி கேதார்நாத் கோவிலுக்கு சென்றார். அங்குள்ள பனிக்குகையிவ் 18 மணி நேரம் அவர் தியானம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Pragya Sigh vow Moun Vrat for 72 hours. She will end her silence on Thursday poll results.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X