பறக்கும் "காவி கொடி".. கோவா முதல்வராக பிரமோத் சாவந்த் பதவியேற்றார்.. பிரதமர் மோடி பங்கேற்பு
பனாஜி: கோவா முதல்வராக இன்று பதவியேற்றார் பிரமோத் சாவந்த்.. பிரதமர் மோடி தலைமையில் நடந்த இந்த விழாவில், ஆளுநர் பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளை பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்
கோவாவின் 40 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன.. இதில், நடந்து முடிந்த தேர்தலில், ஆளும் பாஜக 20 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.
காங்கிரஸ் 11 இடங்களையும், சுயேச்சைகள் 3, ஆம் ஆத்மி 2, மகாராஷ்டிரவாதி கோமந்தக் 2, கோவா பார்வர்டு 1, புரட்சிகர கோன்ஸ் கட்சி 1 இடத்திலும் வெற்றி பெற்றன.
மீண்டும் கோவா முதல்வராகும் பிரமோத் சாவந்த்.. சுயேட்சைகள் உதவியுடன் ஆட்சி அமைக்கும் பாஜக!

பாஜக
அதன்படி, பாஜக சரிக்கு சரியாக 20 இடங்களில் வென்றுள்ளதால், ஆட்சியமைக்க முடியாத சூழல் ஏற்பட்டது.. அதனால், ஆட்சியமைக்க 21 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்ற நெருக்கடியும் கோவா பாஜகவுக்கு ஏற்பட்டது.. அதாவது ஒரே ஒரு எம்எல்ஏவின் ஆதரவு மட்டுமே அக்கட்சிக்கு தேவையாக இருந்தது.. இப்படிப்பட்ட சூழலில்தான் 3 சுயேச்சைகள், 2 தொகுதிகளில் வெற்றி பெற்ற மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி ஆகியவை பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்தன.

பாஜக
இதைத் தொடர்ந்து கடந்த 21-ம் தேதி பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது.. அந்த கூட்டத்தில் இப்போதைய முதல்வர் பிரமோத் சாவந்த்தே, மறுபடியும் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.. இந்த கூட்டம் முடிந்த கையோடு, ஆளுநரையும் சந்தித்து சாவந்த் ஆட்சி அமைக்க உரிமை கோரினார்... அப்போது பாஜகவுக்கு ஆதரவு அளிக்கும் 25 எம்எல்ஏக்களின் லிஸ்ட்டையும் அளித்தார்.

பிரதமர் மோடி
இந்நிலையில்தான், இன்று பதவியேற்றார் பிரமோத் சாவந்த்.. தலைநகர் பனாஜியில் அமைந்துள்ள ஷியாம பிரசாத் முகர்ஜி மைதானத்தில் இன்று காலை 11 மணிக்கு புதிய அரசு பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பல மூத்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். பிரதமர் மோடி தலைமையில் பதவியேற்பு விழா துவங்கிய நிலையில், ஆளுநர் பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளை பிரமோத் சாவந்த்துக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்..

2வது முறை
2வது முறையாக உபியை போலவே, கோவாவிலும் பாஜகவே ஆட்சியை பிடித்து, தற்போதைய முதல்வர்களே மீண்டும் தங்கள் பதவியை தொடர்ந்துள்ளனர்.. இந்த பதவியேற்பு விழாவை முன்னிட்டு கோவாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.. அதன்படி, ட்ரோன்கள் மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.. இதைதவிர, ரயில்வே ஸ்டேஷன்கள், பஸ் ஸ்டாண்டுகள், மற்றும் ஹோட்டல்கள் கடுமையான கண்காணிப்பில் தொடர்ந்து வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.