For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெ.க்கு அஞ்சலி செலுத்த சரக்கு விமானத்தில் வந்தாராம் பிரணாப்.. வதந்தி கிளப்பிய நெட்டிசன்கள்

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நேற்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இதற்காக, ராஜாஜி அரங்கத்துக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மாலை 4 மணியளவில் வருகை தந்தார். முன்னதாக, டெல்லியிலிருந்து ஜனாதிபதி சென்னை நோக்கி தனி விமானத்தில் கிளம்பியபோது, விமானம் புறப்பட்டு சற்று நேரத்தில் விமானத்தின் இன்ஜினில் கோளாறு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

 Pranab Mukerjee travelled to Chennai with great struggle

இதையடுத்து,விமானம் மீண்டும் டெல்லியில் தரையிறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து விமானத்தின் பழுது சரி செய்யப்பட்டு பிறகு மீண்டும் விமானம் சென்னை கிளம்பியது. சென்னைக்கு வருகை தந்த பிரணாப், விமானத்திலிருந்து இறங்கியதும், சாலை மார்க்கமாக ராஜாஜி ஹால் வருவதை தவிர்த்துவிட்டு, ஹெலிகாப்டர் மூலம் அங்கு சென்றார்.

ராஜாஜி ஹால் அருகே ஹெலிகாப்டரில் சென்று இறங்கிய பிரணாப் முகர்ஜி, அங்கிருந்து சென்று ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். ஆனால், டெல்லியிலிருந்தே சரக்கு விமானத்தில் உடலை குறுக்கி கொண்டு ஜனாதிபதி சென்னை வந்து ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தியதாக கூறி தவறான தகவல் சமூக தளங்களில் பரவி வருகிறது.

குடியரசு தலைவரின் டிவிட்டர் கணக்கில், ஜனாதிபதி ஹெலிகாப்டரில் பறக்கும் போட்டோ வெளியிடப்பட்டுள்ளது. இதைத்தான் நெட்டிசன்கள் தப்பாக நினைத்துவிட்டார்கள் போலும்

English summary
President Pranab Mukerjee traveled to Chennai by a plane but netizens says it was a military cargo plane.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X