For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாக்பூர் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் பிரணாப் முகர்ஜி இன்று பங்கேற்பு- மகள் கடும் எதிர்ப்பு

ஆர்.எஸ்.எஸ். இயக்க நிகழ்ச்சியில் பிரணாப் முகர்ஜி இன்று பங்கேற்கிறார்.

By Mathi
Google Oneindia Tamil News

Recommended Video

    ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரணாப்பிற்கு மகள் எதிர்ப்பு

    நாக்பூர்: பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்க நிகழ்ச்சியில் இன்று முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பங்கேற்று உரையாற்றுகிறார்.

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் பிரணாப் முகர்ஜி. காங்கிரஸ் தலைமையிலான ஆட்சிக் காலங்களில் மிக மூத்த அமைச்சராக செயல்பட்டார்.

    Pranab Mukherjee to attend RSS event in Nagpur

    2012 முதல் 2017-ம் ஆண்டு வரை நாட்டின் ஜனாதிபதியாகவும் பதவி வகித்தார். தற்போது இந்துத்துவா கொள்கையை வலியுறுத்தும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நிகழ்ச்சியில் பிரணாப் முகர்ஜி பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கக் கூடாது என்பது காங்கிரஸ் தலைவர்களின் வேண்டுகோள். ஆனால் இதனை நிராகரித்த பிரணாப் முகர்ஜி இன்று ஆர்.எஸ்.எஸ். இயக்க நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்ற உள்ளார்.

    இதனிடையே ஆர்.எஸ்.எஸ். இயக்க நிகழ்ச்சியில் இன்று பிரணாப் ஆற்ற இருக்கும் உரை மிகவும் மறக்க முடியாத ஒன்றாக இருக்கும்; இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதை அவர் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அவரது மகள் ஷர்மிஸ்தா தமது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    English summary
    Former President Pranab Mukherjee's daughter Sharmistha Mukherjee has asked him to reconsider his decision to attend an event organised by the RSS in Nagpur.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X