For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டெல்லியில் பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி!

சத்குரு ஜக்கி வாசுதேவ், பாடகர் ஜேசுதாஸ் ஆகியோருக்கு குடியாசுத் தலைவர் இன்று பத்ம விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

Google Oneindia Tamil News

டெல்லி: சத்குரு ஜக்கி வாசுதேவ், பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ் ஆகியோருக்கு குடியாசுத் தலைவர் இன்று பத்ம விருதுகளை வழங்கி கவுரவித்தார். குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் இந்த விருதுகள் வழங்கப்பட்டன.

நாட்டின் உயரிய அங்கீகாரமான பத்ம விருதுகளை ஆண்டுதோறும் சிறந்த குடிமக்களை தேர்வு செய்து மத்திய அரசு வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் மத்திய அரசால் கடந்த ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்டன.

7 பேருக்கு பத்ம விபூஷண், 7 பேருக்கு பத்ம பூஷண், 75 பேருக்கு பத்மஸ்ரீ என மொத்தம் 89 பேருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டது. இதில் திரைத்துறை, அறிவியல், விளையாட்டு என பல்வேறு துறையைச் சேர்ந்தவர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.

பத்ம விருதுகள் வழங்கப்பட்டன

பத்ம விருதுகள் வழங்கப்பட்டன

இந்த விருதுகளை குடியரசுத்தலைவர் பிராணப் முகர்ஜி இன்று வழங்கினார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் இந்த விருதுகள் வழங்கப்பட்டன.

தமிழகத்தை சேர்ந்த 7 பேர்

தமிழகத்தை சேர்ந்த 7 பேர்

ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் உட்பட தமிழகத்தைச் சேர்ந்த 7 பேருக்கு பத்ம விருதுகளை குடியரசுத் தலைவர் வழங்கினார். மறைந்த பத்திரிக்கையாளர் சோவுக்கு வழங்கப்பட்ட விருதை அவரது மனைவி பத்ம பூஷன் விருதை பெற்றுக்கொண்டார்.‘

வீராங்கனைகளுக்கு பத்மஸ்ரீ

வீராங்கனைகளுக்கு பத்மஸ்ரீ

சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு பத்ம விபூஷன் விருதும் ஒலிம்பிக்கில் நான்காம் இடம் பிடித்த ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர் மற்றும் ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற வீராங்கனை சாக்ஷி மாலிக் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டன.

ஜூலையுடன் நிறைவு

ஜூலையுடன் நிறைவு

இந்த விழாவில் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரம் ஜூலை 24ஆம் தேதியுடன் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
President of India Pranab mukherjee providing Padma awards in Delhi Rashtrapati bhavan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X