For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நடக்க முடியாமல் நடந்துவந்த தீபா கர்மாகருக்கு இறங்கி வந்து விருது கொடுத்த பிரணாப்!

நடக்க முடியாமல் நடந்துவந்த ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகருக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இறங்கி வந்து விருது வழங்கினார்.

Google Oneindia Tamil News

டெல்லி: ஒலிம்பிக்கில் 4ஆம் இடம்பிடித்த ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர் நடக்க முடியாமல் நடந்துவந்தார். அவருக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இறங்கி வந்து விருதை வழங்கினார்.

ரியோடி ஜெனிரோவில் நடைபெற்ற கடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மா கர் நான்காம் இடம் பிடித்தார். சீன, அமெரிக்க, நாடுகளே ஆதிக்கம் செலுத்தும் ஜிம்னாஸ்டிக் விளையாட்டில் நான்காம் இடம் பிடித்து வரலாற்று சாதனை படைத்தார் தீபா கர்மாகர்.

அவருக்கு பிரதமர் மோடி, மத்திய விளையாட்டு அமைச்சர், நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் மத்திய அரசு சார்பில் 89 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன.

தீபா கர்மாகர்ககு பத்மஸ்ரீ

தீபா கர்மாகர்ககு பத்மஸ்ரீ

இதில் தீபா கர்மாகர்க்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் குடியரசுத் தலைவர் மாளிகையில் பத்ம விருதுகள் இன்று வழங்கப்பட்டன.

விருது வாங்க வந்த தீபா

விருது வாங்க வந்த தீபா

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பத்ம விருதுகளை வழங்கினார். தீபா கர்மாகரின் பெயர் அறிவிக்கப்பட்டதும் அவர் விருதை வாங்க வந்தார்.

நடக்கமுடியாமல் நடந்தார்

நடக்கமுடியாமல் நடந்தார்

அப்போது அவரது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக நடக்கமுடியாமல் தாங்கி தாங்கி நடந்து வந்தார். அவருக்கு குடியரசுத் தலைவர் மாளிகை பாதுகாவலர்கள் உதவி செய்து கையை பிடித்து அழைத்து சென்றனர்.

பிரணாப்பே இறங்கி வந்தார்

பிரணாப்பே இறங்கி வந்தார்

ஆனால் ஒரு கட்டத்தில் படியில் ஏற முடியாமல் தீபா கர்மா திணறி நின்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி படிகளில் இறங்கி வந்து விருது அளித்தார்.

English summary
President of India Pranab Mukherjee helped Deepa Karmakar while giving padma awards in the function.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X