For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நீங்கள் 16 பேரும் இணைய வேண்டும்.. இந்தியாவை காப்பாற்றுங்கள்.. பிரசாந்த் கிஷோர் பரபரப்பு அழைப்பு!

இந்தியாவின் ஆன்மாவை காக்க வேண்டும் என்றால் இந்தியாவில் பாஜக ஆளாத மாநில முதல்வர் எல்லோரும் ஒன்று சேர்ந்து இயங்க வேண்டும் என்று அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் அழைப்பு விடுத்துள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லி; இந்தியாவின் ஆன்மாவை காக்க வேண்டும் என்றால் இந்தியாவில் பாஜக ஆளாத மாநில முதல்வர் எல்லோரும் ஒன்று சேர்ந்து இயங்க வேண்டும் என்று அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் அழைப்பு விடுத்துள்ளார்.

பெரும் எதிர்ப்பை மீறி குடியுரிமை சட்ட திருத்த மசோதா நேற்று முதல்நாள் ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது. குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு பின் நேற்று இந்த மசோதா சட்டமானது.

இதற்கு எதிராக நாடு முழுக்க பல இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. முக்கியமாக அரசியல் கட்சிகள் இடையே, கட்சிகளுக்கு உள்ளேயும் கூட இந்த சட்டத்திற்கு எதிராக பலர் குரல் கொடுத்து வருகிறார்கள்.

தமிழே மூத்த மொழி...லோக்சபாவில் சமஸ்கிருத பல்கலைக் கழக மசோதா மீது தமிழக எம்.பி.க்கள் ஆவேச பேச்சு தமிழே மூத்த மொழி...லோக்சபாவில் சமஸ்கிருத பல்கலைக் கழக மசோதா மீது தமிழக எம்.பி.க்கள் ஆவேச பேச்சு

மசோதாவின் தொடக்கம்

மசோதாவின் தொடக்கம்

இந்த மசோதாவை தொடக்கத்தில் இருந்து ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் துணை தலைவர் பிரசாந்த் கிஷோர் எதிர்த்து வந்தார். ஆனால் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் இந்த மசோதாவிற்கு ஆதரவாக வாக்களிக்க உத்தரவு பிறப்பித்தார். இதனால் கட்சிக்குள் பெரிய அளவில் குழப்பம் ஏற்பட்டது.

என்ன கொள்கை

என்ன கொள்கை

இதனால் கட்சியின் கொள்கைகளை தாக்கி பிரசாத் கிஷோர் டிவிட் செய்து வந்தார். இதனால் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் முக்கியமான தலைவர்கள் இரண்டு குழுக்களாக பிரிந்தனர். இந்த நிலையில் தற்போது பாஜகவிற்கு எதிராக 16 மாநில முதல்வர்களை ஒன்று திரட்டும் முடிவில் இறங்கி உள்ளார் பிரசாந்த் கிஷோர்.

என்ன டிவிட்

என்ன டிவிட்

இது தொடர்பாக பிரசாந்த் கிஷோர் செய்துள்ள டிவிட்டில் பாராளுமன்றத்தில் எப்போது மெஜாரிட்டிதான் வெற்றிபெறும். சட்டத்தையும் தாண்டி, இந்தியாவின் ஆன்மாவை காக்க வேண்டும் என்றால் பாஜக ஆளாத 16 மாநில முதல்வர்கள் ஒன்றாக கரம் கோர்க்க வேண்டும். இந்த சட்டத்தை நடைமுறைபடுத்தும் விதத்தை இந்த மாநிலங்கள்தான் மாற்ற வேண்டும்.

மூன்று மாநிலம்

முக்கியமாக பஞ்சாப், கேரளா, மேற்கு வங்க ஆளும் கட்சிகள் இந்த மசோதாவிற்கு எதிராக வாக்களித்துள்ளனர். அவர்கள் என்ஆர்சிக்கும் எதிராக வாக்களித்தனர். இதேபோல் மற்ற பாஜக ஆளாத மாநில முதல்வர்களும் தெளிவான நிலைப்பாடு எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

கவனிக்க வேண்டிய விஷயம்

கவனிக்க வேண்டிய விஷயம்

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் பிரசாந்த் கிஷோர் மிக சிறந்த அரசியல் ஆலோசகர் என்பது குறிப்பிடத்தக்கது. குஜராத்தில் மூன்று முறை மோடி முதல்வராக வெல்லவும், 2014 லோக்சபா தேர்தலில் பாஜக வெல்லவும் காரணமாக இருந்தவர்தான் பிரசாந்த் கிஷோர். தற்போது அவரே பாஜகவை எதிர்க்க தொடங்கி உள்ளார்.

கட்சிகள்

கட்சிகள்

அரசியலில் இருந்தாலும் வெளிப்படையாக கட்சிகளை எதிர்த்து பேசாத இவர் முதல்முறையாக இப்படி பாஜகவை எதிர்த்து பேச தொடங்கி உள்ளார். அதிலும் தற்போது பாஜகவிற்கு எதிரான 16 மாநில முதல்வர்களுக்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

திமுக தேர்தல்

திமுக தேர்தல்

பிரசாந்த் கிஷோர் தற்போது தமிழகத்தில் திமுகவிற்காக பணியாற்றி வருகிறார். திமுகவிற்காக 2021 சட்டசபை தேர்தல் திட்டங்களை வகுத்து வருகிறார்கள். நேற்று முதல்நாள் இதற்காக பிரசாந்த் கிஷோர் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Political analyst Prashant Kishor calls 16 non-BJP CM's to join together to save the soul of India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X