For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டெல்லி மக்களுக்கு நன்றி.. ஆம் ஆத்மிக்கு தேர்தல் பிரசார யுத்தி வகுத்து தந்த பிரசாந்த் கிஷோர் ட்வீட்

Google Oneindia Tamil News

Recommended Video

    Delhi Assembly Election Result | மாஸாக முன்னிலை வகிக்கும் ஆம் ஆத்மி..

    டெல்லி: இந்தியாவின் ஆன்மாவைக் காப்பாற்றிய டெல்லி மக்களுக்கு நன்றி என அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

    டெல்லியில் சட்டசபை தேர்தல் கடந்த 8-ஆம் தேதி நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என கருத்து கணிப்புகள் வெளியாகின.

    காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளுக்கிடையே மும்முனை போட்டி நிலவி வரும் நிலையில் இந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியே ஆட்சியை தக்க வைத்து கொள்ளும் என கணிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்றைய தினம் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

    பாஜகவை நிராகரித்த மக்கள்- அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மமதா பானர்ஜி, மு.க.ஸ்டாலின் வாழ்த்து பாஜகவை நிராகரித்த மக்கள்- அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மமதா பானர்ஜி, மு.க.ஸ்டாலின் வாழ்த்து

    ஆம் ஆத்மி

    ஆம் ஆத்மி

    இதில் ஆரம்பத்திலிருந்தே ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகித்து வருகிறது. சுமார் 50க்கும் மேற்பட்ட இடங்களில் ஆம் ஆத்மி முன்னிலை வகித்துள்ளது. இந்த தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள், முஸ்லீம் பெண்கள் அளித்த ஆதரவே வெற்றிமுகத்தை நோக்கி பயணம் செய்ய காரணமாக அமைந்துவிட்டது. அது போல் டெல்லிக்கு அவர் செய்த வளர்ச்சி திட்டங்களும் காரணமாக அமைந்தன.

    குடிநீர்

    குடிநீர்

    இலவச மின்சாரம், குடிநீர், பெண்களுக்கு இலவச பஸ் பயணம், மெட்ரோ பயணம் உள்ளிட்டவற்றை வழங்கினார். இலவச மின்சாரத்தால் டெல்லியில் உள்ள சாதாரண மக்களால் மாதத்திற்கு 2000 முதல் 3000 ரூபாய் வரை சேமிப்பாகிறது. கல்வி, மருத்துவம் என அனைத்திலும் பாகுபாடற்ற சேவையை அரவிந்த் கெஜ்ரிவால் வழங்கியுள்ளார்.

    ஆன்மா

    ஆன்மா

    இதற்கு பிரதிபலனாக தேர்தல் வெற்றியை மக்கள் வாரி குவித்துள்ளனர். இந்த தேர்தல் வெற்றி குறித்து பிரசாந்த் கிஷோர் ட்வீட் வெளியிட்டுள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் இந்தியாவின் ஆன்மாவை காப்பாற்றிய டெல்லி மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

    பிரசார யுத்தி

    டெல்லியில் 3ஆவது முறையாக அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்சி அமைக்கவுள்ள நிலையில் இந்த ட்வீட்டை கிஷோர் வெளியிட்டுள்ளார். அண்மையில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியிலிருந்து பிரசாந்த் கிஷோர் நீக்கப்பட்டார். இந்த நிலையில் தமிழகத்தில் வரும் 2021 சட்டசபை தேர்தலில் திமுகவுக்கு வியூகம் வகுக்கிறார். அது போல் ஆம் ஆத்மிக்கு பிரசார யுத்தியையும் கிஷோர் வகுத்துள்ளார்.

    English summary
    Prashant Kishore in his tweet says that Thank you Delhi for standing up to protect the soul of India!
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X