For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தூக்கில் தொங்கிய நடிகை பிரதியுஷா: சீலிங் ஃபேனுக்கு மோடி தடை விதிக்கக் கோரும் நடிகை ராக்கி

By Siva
Google Oneindia Tamil News

மும்பை: நாட்டில் மின்விசிறிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி தடை விதிக்க வேண்டும் என நடிகை ராக்கி சாவந்த் தெரிவித்துள்ளார்.

இந்தி தொலைக்காட்சி தொடரில் நடித்து வந்த பிரதியுஷா பானர்ஜி மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் மும்பை ஓஷிவாரா காவல் நிலையத்திற்கு வெளியே பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.

Pratyusha Banerjee death: Rakhi Sawant wants PM to ban ceiling fans

மின்விசிறியுடன்(சீலிங் ஃபேன்) வந்திருந்த அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

பிரதியுஷா அவரின் காதலர் ராகுல் சிங்கின் முன்னாள் மனைவியால் மன உளைச்சலில் இருந்தார். அவரின் தற்கொலை குறித்த முக்கிய வீடியோ என்னிடம் உள்ளது. அதை குற்றப்பிரிவு போலீசாரிடம் அளிப்பேன்.

மின்விசிறியால் தான் நாட்டில் பலர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அதனால் பிரதமர் மோடி மின்விசிறிகளுக்கு தடை விதிக்க வேண்டும். அரசு பிரதியுஷாவின் குடும்பத்திற்கு ரூ.5 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். பிரதியுஷாவின் கழுத்தில் காயம் இருந்தது. அவர் தாக்கப்பட்டிருக்கிறார் என்றார்.

ஒருவரின் இறப்பை வைத்து இப்படி சீப்பாக விளம்பரம் தேடுகிறாரே ராக்கி என பலரும் விமர்சித்து வருகிறார்கள்.

English summary
Actress Rakhi Sawant has asked PM Modi to ban ceiling fans after actress Pratyusha Banerjee hanged herself to death.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X