For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இடைத்தரகர்களின் பாதிப்பில் இருந்து நடுத்தர மக்களை பாதுகாத்தது ஆதார்: ஜனாதிபதி

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

டெல்லி: இடைத்தரகர்களின் பாதுகாப்பில் இருந்து நடுத்தர மக்களை பாதுகாத்தது ஆதார் என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது உரையில் தெரிவித்துள்ளார்.

பொது பட்ஜெட் வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. பரப்பரப்பான அரசியல் சூழ்நிலைக்கிடையே நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது; ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார்.

President addresses about Aadhar in Parliament Budget Session

அப்போது அவரது உரையில் அவர் கூறுகையில் இடைத்தரகர்களின் பாதிப்பில் இருந்து நடுத்தர மக்களை பாதுகாத்தது ஆதார். அரசின் 400 திட்டங்களில் டிஜிட்டல் பணபரிவர்த்தனை அமல்படுத்தப்பட்டுள்ளது.

தீனதயாள் அம்ருத் யோஜனா திட்டத்தின் கீழ் மலிவு விலையில் உயிர் காக்கும் மருந்துகள் விற்பனை செய்யப்படுகிறது. 111 இடங்களில் 60% முதல் 90% சலுகை விலையில் 5,200 உயிர் காக்கும் மருந்துகள் விற்பனை செய்யப்படுகிறது.

டிஜிட்டல் பணபரிவர்த்தனையில் பீம் ஆப் முக்கிய பங்கு வகிக்கிறது. அண்மையில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு உமாங் ஆப் அறிமுகப்படுத்தப்பட்டது. 100க்கும் மேற்பட்ட அரசு சேவைகளுக்கு உமாங் ஆப் . முதன் முறையாக நாட்டின் மொத்த மின் உற்பத்தி தேவையான அளவை விட அதிகரித்துள்ளது.

மாநிலங்களுக்கு குறைந்த விலையில் மின்சாரம் கிடைப்பதை எனது அரசு உறுதி செய்துள்ளது. ஆதார் ஏழை மக்களின் உரிமையை பாதுகாத்துள்ளது என்றார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்.

English summary
President Ramnath Govind addresses on the account of Parliament Budget Session. He says about Aadhar is giving protection to Middle class people from Mediators.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X