For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இஸ்லாமிய பெண்கள் விடுதலைக்கு வழிவகுக்கும் முத்தலாக் சட்டம்- ஜனாதிபதி உரை

இஸ்லாமிய பெண்கள் விடுதலைக்கு வழிவகுக்கும் முத்தலாக் சட்டம் என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது உரையில் தெரிவித்தார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

டெல்லி: இஸ்லாமிய பெண்கள் விடுதலைக்கு வழிவகுக்கும் முத்தலாக் சட்டம் என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாடாளுமன்றத்தில் தனது முதல் உரையில் தெரிவித்தார்.

பொது பட்ஜெட் வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. பரப்பரப்பான அரசியல் சூழ்நிலைக்கிடையே நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது; ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார்.

President addresses on the account of Parliament Budget Session

அப்போது அவரது உரையில் அவர் கூறுகையில் பெண்களுக்கு பேறுகால சலுகைகளை மத்திய அரசு அதிகம் செய்து வருகிறது; பிரதமரின் திட்டங்கள் ஏழைப் பெண்களை சென்றடைந்தது வருகிறது. ஏழைகளுக்கும் வங்கிகளுக்கும் இடையே உள்ள இடைவெளியை அரசு குறைத்துள்ளது.

முத்தலாக் தடை மசோதா நிறைவேற்றப்படும் என நம்புகிறேன். இந்த சட்டம் இஸ்லாமிய பெண்கள் விடுதலைக்கு வழிவகுக்கும். விவசாயிகளின் வருவாயை இரண்டு மடங்காக உயர்த்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏழைகள், பின்தங்கிய மக்களுக்கு அதிகாரமளிக்கும் கருவியாக தூய்மை இந்தியா திட்டம் இருக்கும்.

3 லட்சம் குடும்பத்தினருக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்படும். விவசாயத் தொழில் முன்னேற்றத்துக்கு அரசு முன்னுரிமை தரும். நாடு முழுவதும் 21 கோடி பேருக்கு வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது என்றார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்.

English summary
President Ramnath Govind addresses on the account of Parliament Budget Session. He says about Triple Talaq is a big relief to Muslim Women.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X