For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்திக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற இந்தியரான கைலாஷ் சத்யார்த்திக்கு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

 President congratulates Kailash Satyarthi, lauds civil society role

குழந்தை தொழிலாளர் போன்ற, நாட்டின் தேசிய பிரச்சினையை நாட்டிலுள்ள ஒரு அமைப்பே சிறப்பாக தட்டிக்கேட்டதற்காக கிடைத்துள்ள பரிசு இது. அரசுடன் இணைந்து தனி சொசைட்டிகள் எந்த அளவுக்கு திறம்பட செயல்பட முடியும் என்பதற்கு இந்தியா ஒரு உதாரணம், அதற்கு கிடைத்த பரிசாகவே நோபல் பரிசை கருதுகிறேன்.

இந்த பரிசை வென்ற கைலாஷ் சத்யார்த்திக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"நோபல் பரிசு வென்ற கைலாஷ் சத்யார்த்திக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். ஒட்டுமொத்த தேசமே இந்த சாதனைக்காக பெருமைப்படுகிறது" என்று பிரதமர் நரேந்திர மோடி டிவிட்டரில் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.

English summary
President Pranab Mukherjee has congratulated Kailash Satyarthi on winning the Nobel Peace Prize for his work to abolish child labour in the country, saying it should be seen as recognition of India's vibrant civil society in addressing the nations's social problems like child labour.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X