For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வாராக்கடன்களை வசூலிப்பதற்கான அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல்

நாடு முழுவதும் உள்ள வங்கிகள், வாரக்கடன்களை வசூலிக்க அவசர சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.

By Devarajan
Google Oneindia Tamil News

டெல்லி: வாராக்கடன்களை வசூலிப்பதற்கான அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து வங்கிகளில் வராக்கடன்களை வசூலிக்க புதிய நடைமுறைகள் அமலுக்கு வரவுள்ளன. அவசர சட்டத்தின் மூலம் ரிசர்வ் வங்கிக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தத்தக்கது.

வங்கிகளுக்கு பெரும் சுமையாகவும் தலைவலியாகவும் உள்ள வாராக்கடன்களை வசூலிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.அதிலும், வேண்டுமென்றே வங்கிகளை ஏமாற்றுபவர்கள் மீது நடவடிக்கை கடுமையாக நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டம் வரையறுக்கப்பட்டுள்ளது.

 President Pranab Mukherjee, gives nod to ordinance on banks' non-performing assets

மேலும் ஏமாற்றும் பேர்வழிகள் மீது நடவடிக்கை எடுக்க ரிசர்வ் வங்கிக்கு முழு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவசர சட்டத்திற்கு நேற்று முன்தினம் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. பின்னர் இது ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.

English summary
Indian President Pranab Mukherjee has given his nod to the ordinance dealing with the banking sector's non-performing loans and the amendment to the Banking act.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X