For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லடாக்கில் கார்கில் போர் நினைவுச் சின்னத்தில் நாளை மரியாதை செலுத்தும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்!

Google Oneindia Tamil News

ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் சென்றுள்ள ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை லடாக்கில் உள்ள கார்கில் போர் நினைவுச் சின்னத்தில் மரியாதை செலுத்துகிறார்.

1999-ம் ஆண்டு கார்கிலில் ஊடுருவிய பாகிஸ்தான் ராணுவத்தை வீரம் செறிந்த யுத்தம் மூலம் விரட்டி அடித்தனர் நமது ராணுவ வீரர்கள். கார்கில் யுத்தத்தில் நமது தேசம் வெற்றி பெற்ற ஜூலை 26 கார்கில் வெற்றி தினமாக- Kargil Vijay Diwas கொண்டாப்பட்டு வருகிறது.

President Ram Nath Kovind to pay homage at Kargil War Memorial tomorrow

பிரதமர் நரேந்திர மோடி இன்று தமது மன்கிபாத் வானொலி நிகழ்ச்சியில் கார்கில் யுத்தத்தில் வீரமரணம் அடைந்த நமது மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினார். இந்த நிலையில் ஜம்மு காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களில் 4 நாள் பயணம் மேற்கொண்டுள்ளார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்.

President Ram Nath Kovind to pay homage at Kargil War Memorial tomorrow

இதற்காக ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் தலைநகரான ஶ்ரீநகருக்கு இன்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வருகை தந்தார். அங்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர் ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஏற்றுக் கொண்டார்.

மும்பையில் 4 நாட்கள் கனமழை.. 5ஆவது நாளாக இன்று வெளுத்து வாங்கும்.. ரெட் அலர்ட் வார்னிங் மும்பையில் 4 நாட்கள் கனமழை.. 5ஆவது நாளாக இன்று வெளுத்து வாங்கும்.. ரெட் அலர்ட் வார்னிங்

நாளை லடாக் செல்லும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கார்கில் போர் நினைவுச்சின்னத்தில் மரியாதை செலுத்துகிறார். ஸ்ரீநகரில் காஷ்மீர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் வரும் 27-ந் தேதி அவர் பங்கேற்கிறார்.

President Ram Nath Kovind to pay homage at Kargil War Memorial tomorrow

ஜனாதிபதியின் வருகையையொட்டி ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

English summary
President Ram Nath Kovind will visit Ladakh to pay homage at the Kargil War Memorial on July 26 ahead of Kargil Vijay Diwas.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X