For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அடுத்த வாரம் சபரிமலைக்கு வருகிறார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.. கோயில் அருகே ஹெலிபேட்?

Google Oneindia Tamil News

சபரிமலை: சபரிமலை ஐயப்பன் சுவாமியை தரிசனம் செய்ய சரிமலைக் கோயிலுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வரும் ஜனவரி 5ம் தேதி வருகிறார். அவருக்காக கோயில் அருகே ஹெலிபேட் அமைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் தமிழ் மாதமான கார்த்திகை மற்றும் மார்கழியில் முழுமையாக திறந்திருக்கும். தைமாதம் முதல் வாரம் திறந்திருக்கும் மற்றபடி ஒவ்வொரு தமிம் மாதத்தின் முதல் வாரத்தில் சில நாட்கள் மட்டுமே திறக்கப்படும்.

President Ram Nath Kovind will visit the Sabarimala temple to offer prayers

கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் சன்னதி முழுமையாக திறக்கப்டும் என்பதால் அந்த சமயத்தில் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து தரிசிக்க வருவார்கள்.

இந்நிலையில் மண்டல விளக்கு பூஜை கடந்த டிசம்பர் 27ம் தேதி ஐயப்பன் கோவிலில் நடந்தது. அதன்பிறகு நடை சாத்தப்பட்டு மீண்டும் டிசம்பர் 30ம் தேதி மகரவிளக்கு பூஜைக்காக திறக்கப்பட்டுள்ளது. வரும் ஜனவரி 21ம் தேதி வரை திறந்திருக்கும்.

எடப்பாடி பழனிசாமி முதல்வராகி 3 ஆண்டுகள்... தயாராகிறது சாதனை மலர்எடப்பாடி பழனிசாமி முதல்வராகி 3 ஆண்டுகள்... தயாராகிறது சாதனை மலர்

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த வரும் ஜனவரி 5ம் தேதி ஞாயிற்றுக்கிமை சபரிமலை ஐயப்பனை தரிசிக்க வருகை தர விரும்புகிறார். இதற்காக கேரள மாநில தேவசம் போர்டு அமைச்சர் கடம்பள்ளி சுரேந்திரன் தலைமையில் அதிகாரிகள் குழு பாதுகாப்பு மற்றும் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தியது. கொச்சி விமான நிலையத்தில் தரையிறங்கும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சபரிமலை சன்னிதானம் அருகேயே தரையிறங்க வாய்ப்பு உள்ளதாம். அவருக்காக ஹெலிபேட் அமைத்து அதில் தரையிறங்க ஏற்பாடுகள் நடக்கிறதாம். சன்னிதானம் அருகே ஹெலிபேட் அமைக்கப்பட்டால் அப்படியே நடந்து சென்று சுவாமியை எளிதாக குடியரசுத் தலைவரால் தரிசனம் செய்ய முடியும்.

English summary
President Ram Nath Kovind will visit the Sabarimala temple to offer prayers during the holy Makaravilakku season on Monday
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X