For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜம்மு காஷ்மீரில் குடியரசு தலைவர் ஆட்சி!

Google Oneindia Tamil News

ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் படுத்தப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் பாஜக இணைந்து கூட்டணி ஆட்சி நடத்தி வந்தன. மெகபூபா முப்தி முதல்வராக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம், மக்கள் ஜனநாயக கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை பாரதிய ஜனதா கட்சி வாபஸ் பெற்றது. கூட்டணி ஆட்சி கவிழ்ந்தால் ஆளுநர் ஆட்சி அமல் படுத்தப்பட்டு சட்டசபை முடக்கி வைக்கப்பட்டது.

Presidents rule has been imposed in Jammu And Kashmir

இதன்பிறகு கடந்த நவம்பர் மாதம், சட்டசபையைக் கலைத்து ஆளுநர் உத்தரவிட்டார். ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்து ஆறு மாத காலம் ஆகியுள்ள நிலையில் அதை முடிவுக்கு கொண்டு வந்து விட்டு, இன்று நள்ளிரவு முதல் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அதற்கான உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். லோக்சபா தேர்தலுக்கு முன்பாக அல்லது அதை ஒட்டி ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Presidents rule has been imposed in Jammu And Kashmir
Presidents rule has been imposed in Jammu And Kashmir
English summary
President's rule has been imposed in Jammu And Kashmir after the expiry of six-months of Governor's rule (ANI)
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X