For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சுவர் ஏறி குதித்து ப சிதம்பரத்தை கைது செய்த சிபிஐ அதிகாரிக்கு குடியரசுத் தலைவர் விருது

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் குடியரசுத் தின விழா கோலாகலமாக இன்று நடைபெறுகிறது. இந்த விழாவில் வீர தீர செயல்புரிந்த மற்றும் சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகளுக்கு விருது வழங்கப்படும். இந்நிலையில டெல்லியில் சுவர் ஏறி குதித்து ப சிதம்பரத்தை கைது செய்த சிபிஐ அதிகாரி ராமசாமிக்கு குடியரசுத் தலைவர் சிறந்த காவலருக்கான விருது வழங்கப்பட உள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ப சிதம்பரம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

Presidential medal 28 cbi officers dsp ramaswamy arreested p chidambaram

டெல்லியில் உள்ள வீட்டில் ப சிதம்பரம் அன்றைக்கு தங்கியிருந்தார். அவரை கைது செய்ய டிஎஸ்பி ராமசாமி பார்த்தசாரதி தலைமையிலான சிபிஐ அதிகாரிகள் 6அடி உயரமுள்ள சிதம்பரத்தின் வீட்டின் சுவர் ஏறி குதித்து கைது செய்தனர்.

கண்டிபுக்கு பெயர் போனவர் என்று அறியப்படும் தமிழகத்தைச் சேர்ந்தவரான ராமசாமி பார்த்தசாரதியை வைத்தே ப சிதம்பரத்தை மத்திய அரசு கைது செய்ய வைத்தது. ராமசாமி பார்த்தசாரதி தான் ப சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரததையும் கைது செய்தார்.

தாத்தா கக்கனின் அடியொற்றி.. நேர்மையான காவல் பணியில்.. பேத்தி ராஜேஸ்வரிக்கு குடியரசு தலைவர் பதக்கம்! தாத்தா கக்கனின் அடியொற்றி.. நேர்மையான காவல் பணியில்.. பேத்தி ராஜேஸ்வரிக்கு குடியரசு தலைவர் பதக்கம்!

இந்நிலையில் எஸ்பி ராமசாமி மற்றும் அவரது குழுவிற்கு தலைமை வகித்த தீரேந்தர சுக்லா உள்பட 28சிபிஐ ஆகியோருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த சிறந்த காவலர்களுக்கான விருது வழங்க உள்ளார். லாலு பிரசாத் யாதவ் சம்பந்தப்பட்ட ரயில்வே ஊழல் வழக்கில் திறம்பட பணியாற்றிய சிறப்பு குற்றப்பிரிவு எஸ்பி நிர்பய் குமாருக்கு விருது வழங்கப்பட உள்ளது.

English summary
republic day celebration: Presidential medal 28 cbi officers dsp ramaswamy arreested p chidambaram
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X