For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குடியரசு தலைவர் தேர்­தல்.. ராம்நாத் கோவிந்­துக்கு ஓட்டு போட்ட எதிர்க்கட்சி எம்.பி, எம­்எல்ஏக்கள்

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: குடியரசு தலைவர் தேர்தலில் எம்பி, எம்எல்ஏக்கள் வேறு வேட்பாளர்களுக்கு மாற்றி வாக்களித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குடியரசு தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த், 65.6% வாக்குகளை பெற்றுள்ளார். இது 702,044 என்ற வாக்கு மதிப்பாகும். தேசிய ஜனநாயக கட்சி வேட்பாளர் மீராகுமார் 34.35% வாக்குகளை பெற்றார். இது 367,314 வாக்கு மதிப்பாகும்.

Presidential poll: Cross voting has taken place in many states

இதில், கோவா, அசாம், குஜராத், மகாராஷ்டிரா மற்றும் உத்தரபிரதேசத்தில் எதிர்க்கட்சிகள் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். இது ஓட்டை மாற்றிபோடும் செயலாகும்.

எந்த கட்சிக்காரர்கள் இவ்வாறு செய்தனர் என்பது இன்னும் தெளிவாகவில்லை. இருப்பினும் காங்கிரசை சேர்ந்தவர்களே கூட பாஜக வேட்பாளருக்கு வாக்களித்திருக்கலாம் என்று தெரிகிறது.

மகாராஷ்டிராவில் தங்கள் எம்.பி., எம்எல்ஏக்கள் ராம்நாத் கோவிந்த்துக்கு வாக்களித்ததாக வெளியான தகவலை அக்கட்சி மறுத்துள்ளது. மீராகுமாருக்குதான் வாக்களித்ததாக அக்கட்சி கூறியுள்ளது.

மீராகுமாரிடம் நிருபர்கள் இதுபற்றி கேட்டபோது, இதுபோன்ற ஒரு தேர்தலில் மாற்றி வாக்களிப்பு என்ற வார்த்தை தவறானது என்று தெரிிவித்தார்.

English summary
Cross voting has taken place in Gujarat, Assam, Goa, Maharashtra and Uttar Pradesh in favour of Ram Nath Kovind. The NCP dismissed reports that its MPs and MLAs were voting for NDA candidate Ram Nath Kovind.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X