For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தொடர்ந்து சர்ச்சை பேச்சு.. திரிபுரா முதல்வர் பிப்லாப் குமார் தேப்க்கு பிரதமர் மோடி அவசர அழைப்பு!

திரிபுரா முதல்வர் பிப்லாப் தேப்க்கு பிரதமர் மோடி அவசர அழைப்பு விடுத்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    திரிபுரா முதல்வர் பிப்லாப் குமார் தேப்க்கு பிரதமர் மோடி அவசர அழைப்பு!- வீடியோ

    டெல்லி: தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வரும் திரிபுரா முதல்வர் பிப்லாப் தேப்க்கு பிரதமர் மோடி அவசர அழைப்பு விடுத்துள்ளார்.

    திரிபுராவில் கடந்த கால் நூற்றாண்டாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆட்சி நடைபெற்று வந்தது. அண்மையில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதன் மூலம் அங்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சகாப்தம் முடிவுக்கு வந்தது.

    கடந்த திரிபுரா சட்டசபை தேர்தலில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாத பாரதீய ஜனதா, இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்து வரலாற்று சாதனை படைத்தது. இதைத்தொடர்ந்து திரிபுரா மாநில முதல்வராக பிப்லாப் குமார் தேப் பதவியேற்றார்.

    மகாபாரத காலம்

    மகாபாரத காலம்

    பிப்லாப் குமார் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையிலேயே பேசி வருகிறார். மகாபாராதம் காலத்திலேயே, இன்டர்நெட், செயற்கைகோள் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது என்று பேசி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

    நிற்காத சர்ச்சை பேச்சு

    நிற்காத சர்ச்சை பேச்சு

    இதைத்தொடர்ந்து உலகி அழகி பட்டத்தை கையிலெடுத்து சர்ச்சையை ஏற்படுத்தினார். ஐஸ்வர்யா ராய்க்கு உலக அழகி பட்டம் கொடுத்ததில் நியாயம் இருக்கிறது. ஆனால் டயானா ஹெய்டனுக்கு உலக அழகி பட்டம் ஏன் கொடுத்தார்கள் என கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். அதோடு நிற்கவில்லை பிப்லாப் குமாரின் சர்ச்சைப் பேச்சு.

    பீடா கடை, மாடு மேய்க்கலாம்

    பீடா கடை, மாடு மேய்க்கலாம்

    படித்த இளைஞர்கள் வேலை தேடி அரசியல்வாதிகள் பின்னால் செல்லாமல், பீடா கடை வைத்துப் பிழைக்கலாம் அல்லது மாடு மேய்க்கலாம் தொழில் செய்யலாம் என்ற சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டார். அவரது இந்த பேச்சுக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    பிரதமர் மோடி அவசர அழைப்பு

    பிரதமர் மோடி அவசர அழைப்பு

    இந்நிலையில், மே மாதம் 2-ஆம் தேதி டெல்லி வந்து பிரதமர் மோடியையும், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவையும் சந்திக்கும்படி பிப்லாப் குமார் தேப்க்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. இச்சந்திப்பின்போது, திரிபுரா முதல்வர் பிப்லாப் குமாரை மோடியும் அமித்ஷாவும் கண்டிப்பார்கள் என்று கூறப்படுகிறது.

    English summary
    Prime Minister Modi has called Tripura Chief Minister Biplab Kumar Deb. Biblab Kumar Continuing to talk controversy.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X