For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மோடி போட்ட 'அந்த 8' ட்வீட்கள்: ஒன்னுமே புரியலையே, ஓ ஜப்பான் மொழியா?

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் கணக்கில் ஜப்பான் மொழியில் ட்வீட் செய்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் தான் செய்பவற்றை எல்லாம் அவ்வப்போது தெரிவித்துவிடுவார். இந்நிலையில் இன்று காலை மோடி தனது ட்விட்டர் கணக்கில் 8 ட்வீட்களை போட்டிருந்தார். ஆனால் அவர் என்ன தெரிவித்துள்ளார் என்பது புரியவில்லை.

ஆங்கிலம்

ஆங்கிலம்

மோடியின் ட்வீட்கள் ஆங்கிலத்திலோ, இந்தியிலோ இல்லை சீன மொழி போன்று இருந்தது. இதை பார்த்த பலர் தங்கள் கம்ப்யூட்டரில் தான் ஏதோ பிரச்சனை என்று நினைத்தனர்.

ஜப்பான் மொழி

ஜப்பான் மொழி

அது கம்ப்யூட்டர் பிரச்சனை இல்லை மோடி தான் ஜப்பான் மொழியில் ட்வீட் செய்துள்ளார் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

நண்பர்கள்

நண்பர்கள்

ஜப்பானைச் சேர்ந்த நண்பர்கள் அந்நாட்டு மக்களிடம் அவர்களின் மொழியில் நேரடியாக பேசுமாறு கேட்டுக் கொண்டனர். என் கருத்துகளை மொழி பெயர்த்து கொடுத்து உதவியதற்கு அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று மோடி ட்வீட் செய்துள்ளார்.

ஜப்பான் பயணம்

ஜப்பான் பயணம்

மோடி போட்ட 8 ட்வீட்களில் ஒன்று ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபீக்காக தெரிவிக்கப்பட்டது. மோடி வரும் 30ம் தேதி ஜப்பான் செல்கிறார். அங்கு அவர் செப்டம்பர் 3ம் தேதி வரை சுற்றுப்பயணம் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Prime Minister Narendra Modi Thursday put out a series of tweets in Japanese and said that as his friends from Japan had asked him to talk to the people of Japan directly, he did so.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X