For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மோடிக்கு இந்தியர்கள் அல்ல வெளிநாடு வாழ் இந்தியர்கள் தான் முக்கியம்: காங்கிரஸ் தாக்கு

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமர் மோடிக்கு இந்தியாவில் வசிக்கும் மக்களை விட வெளிநாடு வாழ் இந்தியர்கள் தான் முக்கியம் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

அடிக்கடி வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி பற்றி காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. இது குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபல் கூறுகையில்,

Prime Minister More Concerned About NRIs Than Resident Indians,' Says Congress

மோடிக்கு இந்தியாவில் வசிக்கும் குடிமக்களை விட வெளிநாடு வாழ் இந்தியர்களின் நலம் தான் முக்கியமாக உள்ளது. பிரதமர் வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கையில் மக்களோ அவர் தங்களை மறந்துவிட்டதாக நினைக்கிறார்கள்.

சீன சுற்றுலாப்பயணிகளுக்கு இ- விசா அளிக்கும் திட்டம் முதலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது என்றார்.

உயர் பதவியில் இருப்பவர்கள் ஏன் வெளிநாடுகளுக்கு செல்கையில் நாட்டை பற்றி நினைக்காமல் தங்களைப் பற்றி மட்டுமே நினைக்கிறார்கள் என்று காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியின் அரசியல் செயலாளர் அகமது பட்டேல் தெரிவித்துள்ளார்.

மோடி சிறந்த பேச்சாளர் என்று கருதப்படுகிறார். ஆனால் வர வர அவரது பேச்சு யாருக்கும் பிடிக்காமல் போகிறது என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுஷ்மிதா தேவ் கூறியுள்ளார்.

English summary
Prime Minister Narendra Modi was today the target of attack of Congress which took serious exception to his remarks abroad on the lament among some people about their "misfortune" of being born in India and said he is "more concerned about NRIs than resident Indians."
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X