For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தீதி.. உங்களோட 40 எம்எல்ஏக்கள் இப்ப என்கூட தொடர்புல இருக்காங்க.. மம்தாவை கலங்கடித்த மோடி

Google Oneindia Tamil News

கொல்கத்தா: திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 40பேர் பாஜகவுடன் தொடர்பில் உள்ளதாக பேசிய பிரதமர் மோடி, அவர்கள் அனைவரும் மே 23ம் தேதிக்கு பிறகு பாஜகவில் இணைய உள்ளதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள செராம்பூர் தொகுதியில் இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், தீதி (மம்தா) அவர்களே வரும் மே 23ம் தேதி தேர்தல் முடிவு வரப்போகிறது. அப்போது தாமரை மலரப்போகிறது.

Prime Minister Narendra Modi in Serampore, West Bengal, didi, 40 of your MLAs are in contact with me

உங்கள் எம்எம்எல்ஏக்கள் உங்களை விட்டு விலகப்போகிறார்கள். தீதி அவர்களே, இன்றைக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 40 எம்எல்ஏக்கள் பாஜகவுடன் தொடர்பில் உள்ளார்கள். எனவே தேர்தல் முடிவுக்கு பின் அவர்கள் பாஜகவில் இணைவார்கள்" இவ்வாறு கூறினார்.

தாய்மொழி இந்தியில் 5 லட்சம் மாணவர்கள் பெயில்.... உ.பி. பத்தாம் வகுப்பு ரிசல்ட்டில் பரபரப்புதாய்மொழி இந்தியில் 5 லட்சம் மாணவர்கள் பெயில்.... உ.பி. பத்தாம் வகுப்பு ரிசல்ட்டில் பரபரப்பு

மேலும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை கடுமையாக விமர்சித்த பிரதமர் மோடி, மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் குண்டர்கள் என்றும், 4வது கட்ட மக்களவை தேர்தலில் வன்முறையில் ஈடுபட்டதாகவும் குற்றம்சாட்டினார்.

அசான்சோல், முர்ஷிதாபாத் உள்ளிட்ட மேற்கு வங்கத்தின் சில தொகுதிளுக்கு இன்று 4வது கட்டமாக மக்களவை தேர்தல் நடந்து வருகிறது. அசான்சோலில் வாக்குச்சாவடி எண் 125 முதல் 129 வரை உள்ள வாக்குச்சாவடிகளில் பாஜக, திரிணாமுல், இடதுசாரிகளிடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு ஏற்பட்டது.

English summary
Prime Minister Narendra Modi in Serampore, West Bengal: Didi, on 23 May when the results will come, lotus will bloom everywhere and your MLAs will leave you. Even today, didi, 40 of your MLAs are in contact with me.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X