For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2 நாள் பயணமாக வங்கதேசம் சென்றார் மோடி! இரு நாடுகளுக்கும் பஸ் சேவை தொடக்கம்!!

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அரசு முறை பயணமாக இன்று வங்காளதேசம் சென்றடைந்தார். இந்தியா-வங்கதேசம் இடையே பஸ் போக்குவரத்தை தொடங்கி வைத்தார் அவர்.

பிரதமர் நரேந்திர மோடி, அண்டைநாடான வங்காளதேசத்துக்கு 2 நாள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக அவர் இன்று காலை தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து டாக்கா புறப்பட்டு சென்றார்.

Prime Minister Narendra Modi reaches Bangladesh

காலை 10.10 மணிக்கு டாக்கா சென்றடைந்த அவரை அந்த நாட்டின் பிரதமர் ஷேக் ஹசினா, விமான நிலையத்துக்கு சென்று நேரில் வரவேற்றார். மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பும், ராணுவ மரியாதையுடன் கூடிய வரவேற்பும் அளிக்கப்பட்டது.

பிரதமர் மோடியின் வங்காளதேச பயணத்தில் அவரது அழைப்பின்பேரில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் இணைந்து கொண்டார். இதற்காக நேற்று இரவு அவர் டாக்கா போய் சேர்ந்தார். இன்று மதியம் அவர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

1971ம் ஆண்டு நடந்த வங்காளதேச விடுதலைப்போரில் உயிர்நீத்த தியாகிகளின் நினைவுச்சின்னத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். பிரதமர் ஷேக் ஹசினாவின் தந்தையும், அந்த நாட்டின் ஜனாதிபதியாகவும், பிரதமராகவும் திகழ்ந்த ஷேக் முஜிபுர் ரகுமானின் நினைவிடத்திலும் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா மற்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோருடன் சேர்ந்து கொல்கத்தா-டாக்கா-அகர்தலா மற்றும் டாக்கா-ஷில்லாங்-கவுகாத்தி வழித்தடம் வழியாக செல்லும் இரண்டு பஸ் சேவைகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Prime Minister Narendra Modi reaches Bangladesh

இந்த பயணத்தின்போது, இந்தியாவுக்கும், வங்காளதேசத்துக்கும் இடையே சிறிய கப்பல் போக்குவரத்து நடத்துவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என தகவல்கள் கூறுகின்றன. பிரதமர் மோடி, வங்கதேசத்தின் ஜனாதிபதி அப்துல் ஹமித் மற்றும் பிற முக்கிய தலைவர்களையும் சந்திப்பார் என அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன. சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நாளை இரவு மோடி நாடு திரும்புகிறார்.

English summary
Prime Minister Narendra Modi arrives in Bangladesh's capital Dhaka on a two-day Visit. PM Modi is welcomed at the airport by Bangladesh PM Sheikh Hasina and the armed forces.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X