For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மோடியின் முதல் வெளிநாட்டு சுற்றுப்பயண தகவல் வெளியானது

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமரானதும் தனது முதலாவது வெளிநாட்டு சுற்றுப்பயணமாக நரேந்திரமோடி பூட்டான் நாட்டுக்கு செல்கிறார்.

கடந்த மாதம் 26ம்தேதி பிரதமராக பொறுப்பேற்ற நரேந்திரமோடி, முதலாவது வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை எந்த நாட்டுக்கு மேற்கொள்வார் என்பது பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. ஜப்பானுக்கு அவர் செல்வார் என்று சிலரும், இலங்கை செய்ய உள்ளதாக சில தகவல்களும் கூறிவந்தன.

Prime minister's first foreign visit to be Bhutan

இந்நிலையில் அவர் அண்டை நாடான பூட்டானுக்கு முதல் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள உள்ளதாக அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பூட்டானுக்கு செல்லும் பிரமதர், அந்த நாட்டு பிரதமர் டிசெரிங் டோப்கேயுடன் இரு நாடுகளுக்கு இடையே நல்லுறவை வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இதற்கு அடுத்தபடியாக ஜூலை இரண்டாவது வாரத்தில் பிரேசில் நாட்டில் நடைபெறும், இந்தியா, பிரேசில், ரஷ்யா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கிடையேயான மாநாட்டில் பங்கேற்க உள்ளார் மோடி.

English summary
Prime Minister Narendra Modi will travel to neighbouring Bhutan later this month in his first foreign visit after assuming power.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X