For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தக்காளி, வெங்காயம், உருளை.. இதுவே எங்கள் முன்னுரிமை.. பெங்களூர் பொதுக்கூட்டத்தில் மோடி பேச்சு!

தனது அரசு காய்கறி மற்றும் பழங்கள் உற்பத்திக்கு முன்னுரிமை தரும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    எங்கள் ஆட்சியில் தக்காளி வெங்காயத்திற்குத்தான் முன்னுரிமை- மோடி- வீடியோ

    பெங்களூரு: கர்நாடகாவில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் காய்கறி மற்றும் பழங்கள் உற்பத்திக்கு முன்னுரிமை தரப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

    கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட பட்ஜெட் அறிவிப்பின்படி ஆபரேஷன் பசுமைத் திட்டம் மூலம் காய்கறிகள் மற்றும் பழங்கள் உற்பத்திக்கு தனது அரசு முன்னுரிமை வழங்கம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    கர்நாடக சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு அம்மாநில பாஜக தலைவர் எடியூரப்பா பிரச்சார கூட்டங்களை நடத்தி வருகின்றார். இதில் அமித்ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

    பாஜக ஆட்சிக்கு வந்தால்

    பாஜக ஆட்சிக்கு வந்தால்

    இந்நிலையில் நேற்று கர்நாடகாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு மக்களிடையே உரையாற்றினார். அப்போது கர்நாடகாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால், விவசாயிகள் நலன் பாதுகாக்கப்படும் என அவர் கூறினார்.

    இதயத்தில் தாங்குகிறார்

    இதயத்தில் தாங்குகிறார்

    விவசாயிகளை எடியூரப்பா இதயத்தில் தாங்குகிறார் என்றும் பிரதமர் மோடி கூறினார். விவசாயிகளுக்காக செயல்படுத்த எண்ணற்ற திட்டங்களை வைத்துள்ளோம் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

    ஆபரேஷன் கிரீன்

    ஆபரேஷன் கிரீன்

    பழங்கள் மற்றும் காய்கறிகளை விளைவிக்கும் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றார். அதாவது தக்காளி, வெங்காயம், உருளை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்காக ஆபரேஷன் க்ரீன் என்ற திட்டத்தை அமல்படுத்துவோம் என்றார்.

    விவசாயிகளுக்கு பயன்

    விவசாயிகளுக்கு பயன்

    விவசாயிகளை மனதில் வைத்தே பட்ஜெட்டில் ஆபரேஷன் கிரீன் திட்டம் அறிவிக்கப்பட்டது என்றும் பிரதமர் மோடி கூறினார். பால்வளத்தை பெருக்குவதில் அமுல் திட்டம் எப்படி முன்மாதிரியாக இருந்ததோ அதேபோல் ஆபரேஷன் க்ரீன் திட்டம் பழம், காய்கறி விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும பிரதமர் மோடி கூறினார்.

    சீர்திருத்தம், செயல்திறன், மாற்றம்

    சீர்திருத்தம், செயல்திறன், மாற்றம்

    சீர்திருத்தம், செயல்திறன், மாற்றமே தங்களின் ஆட்சி மாதிரி என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார். "எங்கள் அரசாங்கம் சீர்திருத்த கொள்கைகளை, செயல்படுத்துவதும், மாற்றுவது என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    மாற்றத்தை கொண்டு வருகிறோம்

    மாற்றத்தை கொண்டு வருகிறோம்

    நாங்கள் மிகச் சிறிய பிரச்சனைகளை தீர்க்க முயற்சி செய்கிறோம் என்றும் நிர்வாகத்தில், எங்கள் கொள்கைகள் மற்றும் எங்கள் வேலை மூலம், நாங்கள் மாற்றத்தை கொண்டு வருகிறோம், என்றும் பிரதமர் மோடி கூறினார்.

    காங். அரசு விரட்டப்படும்

    காங். அரசு விரட்டப்படும்

    காங்கிரஸ் அரசு மாநிலத்தில் இருந்து விரட்டப்படும் என்றும் பிரதமர் மோடி கூறினார். 50 கோடி பேருக்கு 5 லட்சம் ரூபாய் மருத்துவ காப்பீடு வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருப்பதையும் மோடி சுட்டிக்காட்டியுள்ளார்.

    நாட்டிற்கு பயனளிக்கும்

    நாட்டிற்கு பயனளிக்கும்

    50 கோடி பேரின் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்ள மட்டும் இந்த திட்டம் அறிவிக்கப்படவில்லை. இது நோய்களை தடுக்க உதவும் என்றும் இது முழு நாட்டிற்கும் பயனளிக்கும் என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

    English summary
    Prime Minister Narendra Modi said Sunday that farmers producing vegetables and fruits will be given top priority by his government through the Operation Greens scheme announced in the Union Budget last week. Modi said this Karnataka. Prime Minister Modi has participated in the rally at Karnataka.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X