For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஊழல் தடுப்பு சட்டத்தில் ஜெயலலிதா மீது விசாரணை கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கியிருந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது, ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தக்கோரி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

Private plea about Jayalalitha asset case dismissed

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீது சொத்துக்குவிப்பு வழக்கு நடந்து வந்தது. இந்த நிலையில், 2007ம் ஆண்டு ராஜவேலு என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ஜெயலலிதா மக்கள் பிரதிநிதி என்பதால் அவரை அரசு ஊழியராக கருதக்கூடாது என்றும், ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் ஜெயலலிதாவிடம் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ் மற்றும் யு.யு.லலிதா அமர்வு விசாரித்தது. ஜெயலலிதா இறந்துவிட்டதால், மனு காலாவதியாகி விட்டது என்று கூறி, நீதிபதிகள் அமர்வு மனுவை தள்ளுபடி செய்தது.

English summary
Private plea about Jayalalitha asset case dismissed in the Supreme court on today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X