For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரூ.1ல் தொடங்கி ரூ. 12லட்சம் வரை சம்பளம் பெறும் இந்திய முதல்வர்கள்...

Google Oneindia Tamil News

அகமதாபாத்: இந்திய மாநிலங்களின் முதல்வர்கள் வாங்கும் சம்பளம் குறித்தான விவரம் வெளியிடப் பட்டுள்ளது. அதன் படி, ஆண்டொன்றுக்கு அதிகபட்சமாக ரூ 12 லட்சமும், குறைந்த பட்சமாக ரூ 1ம் சம்பளம் வாங்கப் படுவதாக தெரிய வந்துள்ளது.

மாநிலத்தையே கட்டி ஆளும் பெரிய பதவி, கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குவார்கள் என்ற பிம்பத்தை உடைப்பதாக அமைந்துள்ளது இந்த விவரம். அகமதாபாத் இந்திய நிர்வாகவியல் கழகத்தின் ஆய்வுத் திட்டமான 'பேசெக் இந்தியா' இது குறித்து தகவல் வெளியிட்டுள்ளது.

இதோ, இந்திய முதல்வர்களின் சம்பள விவரத்தைப் பற்றி நாமும் தெரிந்து கொள்வோம்....

பஞ்சாப் முதலிடம்...

பஞ்சாப் முதலிடம்...

இந்தியாவிலேயே அதிக சம்பளம் பெறும் முதல்வர் என்ற பெருமையை பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பெற்றுள்ளார். இவரது சம்பளம் ரூ 12 லட்சம் ஆகும்.

2வது இடத்தில்....

2வது இடத்தில்....

இவருக்கு அடுத்தப் படியாக, ரூ 11 லட்சத்து 94 ஆயிரத்துடன் இரண்டாவது இடத்தில் உள்ளார் பீகார் முதல்வர் நிதீஷ் குமார்.

3வது இடத்தில்...

3வது இடத்தில்...

மூன்றாவது இடத்தில் அசாம் முதல்வர் தரூண் ரூ 9 லட்சத்து 96 ஆயிரத்துடனும், நான்காவது இடத்தில் ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாவும் உள்ளார். இவரது சம்பளம் ரூ 8 லட்சத்து 40 ஆயிரம் ஆகும்.

மோடி....

மோடி....

இந்த வரிசையில், ரூ 7 லட்சத்து இரண்டாயிரம் சம்பளம் வாங்கும் குஜராத் முதல்வரும், பாரதீய ஜனதாக் கட்சியின் பிரதம வேட்பாளருமான மோடியின் பெயர் 6 வது இடத்தில் உள்ளது.

9வது இடத்தில்....

9வது இடத்தில்....

கர்நாடக முதல்வர் சித்தராமையா 3 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் சம்பளத்துடன் 9 வது இடத்தைப் பெற்றுள்ளார்.

10வது இடத்தில்....

10வது இடத்தில்....

அதேபோல், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே, 3 லட்ச ரூபய் சம்பளத்துடன் 10 இடத்தைப் பெற்றுள்ளார்.

குறைந்த சம்பளம்....

குறைந்த சம்பளம்....

மிகக் குறைந்த சம்பளமாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பான்ர்ஜி, ரூ 96 ஆயிரத்தை சம்பளமாகப் பெற்றுக் கொள்வதாக அந்தத் தகவல் தெரிவிக்கின்றது.

ஒரு ரூபாய் மட்டும்...

ஒரு ரூபாய் மட்டும்...

இவை எல்லாவற்றிற்கும் மேலாக, நமது தமிழக முதல்வர் ரூ1 மட்டும் சம்பளமாகப் பெறுவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

தகவல் இல்லை...

தகவல் இல்லை...

அகமதாபாத் இந்திய நிர்வாகவியல் கழகத்தின் ஆய்வுத் திட்டமான 'பேசெக் இந்தியா' தகவலின் படி, கீழ்கண்ட 5 மாநிலங்களின் முதல்வர்கள் சம்பளம் மட்டும் தெரிவிக்கப் படவில்லை. அவைகளாவன, அருணாச்சலப் பிரதேசம், கேரளா, ஒடிசா, உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகியன ஆகும்.

English summary
Cheif ministers in India earn berween re 1 and Rs 12 lakh annually. EArning Rs 96,000 per year, West Bengal CM Mamata Banerjee is the poorest while Punjab's Prakash Singh with a salary of Rs 12 lakh per annum is rechest.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X