காதலர் தினத்தை எதிர்க்கும் ஆர்எஸ்எஸ்... பிரியா வாரியரின் வைரல் வீடியோவை பதிலாக சொன்ன ஜிக்னேஷ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  காதலர் தின எதிர்ப்பு.. காதலர்களை துரத்தி சென்ற ஹிந்துத்துவ அமைப்பினர்

  டெல்லி: புருவ புயல் பிரியா வாரியரின் மணிக்யா பாடல் வைரலானதே காதலர் தினத்தை எதிர்க்கும் ஆர்எஸ்எஸ்க்கு சரியான பதிலடி என்று குஜராத் எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி தெரிவித்துள்ளார். காதலர் தினத்திற்கு வாழ்த்து சொன்னதோடு பிரியா வாரியரின் வீடியோவையும் அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

  உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பரிசுப் பொருட்களை வாங்கி கொடுப்பது, சர்ப்ரைஸ் கொடுப்பது என்று காதலர்கள் அன்பை பரிமாறி வருகின்றனர்.

  இதே சமயம் கலாச்சார சீரழிவுக்கு வழிவகுக்கும் காதலர் தின கொண்டாட்டத்திற்கு இந்து அமைப்பினர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் காதலர்கள் அதிகம் கூடும் இடங்களில் அவர்களை மிரட்டி வருகின்றனர்.

  காதலர் தினத்துக்கு எதிர்ப்பு

  காதலர் தினத்துக்கு எதிர்ப்பு

  இந்து மஹா சபை,ஸ்ரீராம் சேனா, பாரத் சேனா, சக்தி சேனா, பஜ்ரங்க தல் உள்ளிட்டவை இளம் ஜோடிகளைக் கண்டால் அவர்களை இப்போதே தாலி கட்டுங்கள் என்று கூறி வற்புறுத்தியும் வருகின்றனர். காதலர் தின எதிர்ப்பு போராட்டம் என்ற பெயரில் சில இடங்களில் பொது சொத்துகளுக்கும் அவர்கள் சேதம் ஏற்படுத்தி வருகின்றனர்.

  ஏன் எதிர்க்கிறார்கள்?

  ஏன் எதிர்க்கிறார்கள்?

  காதலர் தினம் குறித்து தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் ஆர்எஸ்எஸ், பலாத்காரம் போன்ற சம்பவங்கள் நடப்பதற்கு மேற்கத்திய கலாச்சாரமான காதலர் தினம் கொண்டாடுவதும் ஒரு காரணம் என்று சொல்லி வருகிறது. இதற்காகவே கலாச்சார பாதுகாவலர்களான தாங்கள் ஒவ்வோர் ஆண்டும் காதலர் தின கொண்டாட்டத்திற்கு தங்களது எதிர்ப்பை வெளிக்காட்டி வருவதாக கூறி வருகின்றனர்.

  ஜிக்னேஷ் வாழ்த்து

  இந்நிலையில் குஜராத் எம்எல்ஏவும் இளம் தலித் தலைவருமான ஜிக்னேஷ் மேவானி தனது டுவிட்டர் பக்கத்தில் காதலர் தினத்தை ஒட்டி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். மணிக்யா மலரயா பூவி பாடல்வைரல் ஹிட்டாகியுள்ளதே காதலர் தினத்தை எதிர்க்கும் ஆர்எஸ்எஸ்க்கான பதிலடி என்றும் அவர் கூறியுள்ளார்.

  வெறுக்கக்கூடாது

  வெறுக்கக்கூடாது

  ஒருவரை வெறுப்பதை விட அவரை அதிகமாக நேசிக்க வேண்டும் என்பதை இந்தியர்கள் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளனர் என்றும் ஜிக்னேஷ் தெரிவித்துள்ளார். இதோடு நின்றுவிடவில்லை புருவப் புயல் பிரியா பிரகாஷ் வாரியரின் வீடியோவையும் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஜிக்னேஷ் இணைத்துள்ளார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Gujarat MLa Jignesh Mevani tweets Happy valentines day and adds Viral hit of ‘Manikya Malaraya Poovi’ is the answer to RSS's Valentines Day protest.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற