For Daily Alerts
Just In
வீட்டில் வைத்து விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண் உட்பட 6 பேர் கைது
டெல்லி: குர்கான் பகுதியில் விபச்சாரம் நடப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் ஒரு பெண் உட்பட ஆறுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டெல்லியருகே ஹரியானா மாநிலத்தில் அமைந்துள்ள நகரம் குர்கான். இங்கு விபச்சார தொழில் சமீபகாலமாக கொடிகட்டி பறக்கிறது. டெல்லியில் இருந்தும் வாடிக்கைாயளர்கள் அங்கு செல்வது வழக்கம் என்று கூறப்படுகிறது.

இதையடுத்து குர்கானில் குறிப்பிட்ட ஒரு வீட்டில் போலீசார் அதிரடி ரெய்டு நடத்தி, சுமித், #அமித், கவுரவ், நவனீத், அபிஷேக் ஆகியோரையும் மேலும் ஒரு பெண்ணையும் கைது செய்துள்ளனர். இதில் முதல் மூவர் ஹிசான் பகுதியையும் நவனீத் ஜின்ட் பகுதியையும், அபிஷேக், குர்கானையும் சேர்ந்தவர்கள்.
குற்றவாளிகள் அனைவருமே 20 முதல் 25 வயதுக்குட்பட்டவர்களாகும். கைதான பெண் குறித்த விவரங்களோ போலீசார் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.