For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சீமாந்திரா பந்த்: திருப்பதியில் உள்ள பக்தர்களுக்கு உணவு தயார் செய்த தேவஸ்தானம்

Google Oneindia Tamil News

Protestors block road to Tirumala, thousands of pilgrims stranded
திருப்பதி: திருமலை மற்றும் திருப்பதியில் முழு அடைப்பு காரணமாக பக்தர்கள் அவதிப்படாமல் இருக்க அவர்களுக்கு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் இணை அதிகாரி சீனிவாசராஜு தெரிவித்துள்ளார்.

தனி தெலங்கானாவை எதிர்த்து இன்று சீமாந்திரா பகுதி முழுவதும் பந்த் நடத்தி வருகிறது கூட்டு நடவடிக்கை குழு. போக்குவரத்து முழுமையாக முடக்கப் பட்டுள்ள நிலையில், திருப்பதி கோவிலில் தங்கியுள்ள பக்தர்களுக்கு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தான சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தேவஸ்தான செயல் அதிகாரி சீனிவாசராஜு கூறியுள்ளதாவது, ‘தனி தெலங்கானாவை பிரிப்பதை எதிர்த்து திருப்பதி மற்றும் திருமலையில் செவ்வாய்க்கிழமை 24 மணிநேர பந்த் நடைபெறவுள்ளது.

இதையொட்டி பக்தர்களுக்கு தேவஸ்தானத்துக்கு சொந்தமான அனைத்து தங்கும் விடுதிகளிலும் 3 வேளையும் உணவு வழங்கப்படும். திருமலையில் 48 மணிநேரத்துக்கு மேல் வாடகை அறைகளை பக்தர்கள் நீட்டித்தால் 2 மடங்கு அதிகமாக வாடகை வசூல் செய்யப்படும். ஆனால் முழு அடைப்பு காரணமாக இந்த விதிமுறை செவ்வாய்கிழமை மட்டும் ரத்து செய்துள்ளது' எனத் தெரிவித்துள்ளார்.

English summary
The country's most popular temple at Tirumala was accessible only by foot for those wanting to pray at the hilltop shrine since 8 am on Tuesday. Protestors agitating against the bifurcation of Andhra Pradesh have blocked the movement of all vehicles from Tirupati at the foothills to Tirumala and are also preventing those who have prayed from coming down hill.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X