For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மலையேறிவிட்டு போராட்டக்காரர்களை பார்த்து பயந்து குடும்பத்துடன் திரும்பிய ஆந்திரா பெண் #sabarimala

By Siva
Google Oneindia Tamil News

Recommended Video

    போராட்டக்காரர்களை பார்த்து பயந்து குடும்பத்துடன் திரும்பிய பெண்

    பம்பை: ஆந்திராவில் இருந்து குடும்பத்துடன் வந்த பெண் மலையேறிய போது போராட்டக்காரர்களுக்கு பயந்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் செல்லாமல் திரும்பிச் சென்றுவிட்டார்.

    சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்த பிறகு முதல்முறையாக நேற்று மாலை நடை திறக்கப்பட்டது.

    Protestors scare Andhra woman near Sabarimala temple

    நீதிமன்றம் தீர்ப்பு அளித்தாலும் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் யாரும் கோவிலுக்குள் செல்லக் கூடாது என்று கூறி பலரும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டத்தினால் நேற்று நிலக்கல், பம்பை உள்ளிட்ட நான்கு இடங்களில் பதட்டமான சூழல் நிலவியது.

    கோவிலுக்கு சென்ற பெண்களை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தினார்கள். இந்நிலையில் ஆந்திராவை சேர்ந்த மாதவி(40) என்ற பெண் தனது மகன் மற்றும் மகளுடன் சபரிமலை கோவிலுக்கு வந்தார்.

    [சபரிமலை கோவில் விவகாரம்: தீவிரம் அடைந்த போராட்டம், கேரளாவில் இன்று பந்த்]

    அவர் பம்பையை அடைந்த பிறகு தனது குழந்தைகளுடன் மலையேறினார். அப்போது அவருக்கு பாதுகாப்பாக வந்த போலீசார் கோவில் அருகில் வந்ததும் சென்றுவிட்டனர். நீங்களாக கோவிலுக்குள் செல்லுங்கள் என்று போலீசார் கூறியதாக மாதவி தெரிவித்தார். மாதவியை பார்த்த போராட்டக்காரர்கள் கோபம் அடைந்து கூச்சலிடவே அவர் பயந்துவிட்டார்.

    உயிருக்கு பயந்த மாதவி தனது குழந்தைகளுடன் திரும்பிச் சென்றுவிட்டார். தற்போதும் கோவிலுக்கு செல்லும் பெண்களை போராட்டக்காரர்கள் விரட்டி வருகிறார்கள். அவர்களுக்கு பயந்து பெண்கள் கோவிலுக்கு செல்வதை தவிர்க்கிறார்கள்.

    English summary
    A 40-year-old woman from Andhra Pradesh who reached Sabarimala Ayappan temple returned wihtout having darshan as she was intimidated by the protestors.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X