For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாளை விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி சி-39 ராக்கெட்...தொடங்கியது 29 மணி நேர கவுண்டவுன்!

பி.எஸ்.எல்.வி சி-39 ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான 29 மணி நேர கவுண்டவுன் இன்று பிற்பகல் தொடங்கியது.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

ஸ்ரீஹரிகோட்டோ : ஸ்ரீஹரிகோட்டா சதீஷ்தவான் விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட உள்ள பி.எஸ்.எல்.வி சி -39 ராக்கெட்டுக்கான 29 மணி நேர கவுண்டவுன் பிற்பகல் 2 மணியளவில் தொடங்கியுள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் சார்பில் 31ம் தேதி பி.எஸ்.எல்.வி. வரிசையில் சி-39 ராக்கெட் ஏவப்பட உள்ளது. இதில் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்ட ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1எச் என்ற செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. 320 டன் எடையும் 44.4 மீட்டர் உயரமும் கொண்ட இந்த செயற்கைகோள் இயற்கை சீற்றம், பேரிடர் மேலாண்மை, கடல்சார் செயல்பாடுகளை கண்காணிக்க முடியும்.

 PSLV C 39 all set ready for the launch, 29 hours countdown started

ஏற்கனவே, 7 செயற்கைகோள்களை திட்டமிட்டபடி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இதில் முதலில் செலுத்தப்பட்ட செயற்கைகோளின் ஆயுள் காலம் நிறைவடைய இருப்பதை தொடர்ந்து, புதிதாக 1,425 கிலோ எடை கொண்ட ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-எச் என்ற செயற்கைகோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது.இதனை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து நாளை மாலை 7 மணிக்கு விண்ணில் செலுத்துகிறது.

இதனையொட்டி இறுதிகட்ட பணியான 29 மணிநேர கவுண்ட்டவுன் இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கியது. பூமியில் இருந்து குறைந்தபட்சம் 284 கிலோ மீட்டரிலும், அதிகபட்சம் 20 ஆயிரத்து 657 கிலோ மீட்டரிலும் இந்த செயற்கைகோள் நிலை நிறுத்தப்படுகிறது.

English summary
PSLV C 39 started its 29 hours countdown which is all set ready for the launch by tomorrow evening from Sriharikotta.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X