For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிஎஸ்எல்வி- சி 34 ராக்கெட் வெற்றி: 20 செயற்கை கோள்கள் வெற்றிகரமாக நிலை நிறுத்தம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

ஸ்ரீஹரிகோட்டா: ஆந்திர மாநிலம் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஒரே நேரத்தில் 20 செயற்கைகோளுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி - சி34 ராக்கெட். விண்ணில் ஏவப்பட்ட சில நிமிட நேரங்களில் 20 செயற்கை கோள்களும் விண்ணில் நிலை நிறுத்தப்பட்டதால் விஞ்ஞானிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இது இஸ்ரோவின் மிகப்பெரிய சாதனையாகும்.

பிஎஸ்எல்வி - சி34 ராக்கெட்டில், இந்தியாவின் கார்டோசேட்-2 செயற்கைக்கோள் உள்ளிட்ட மூன்று செயற்கைகோள்கள் தவிர, அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, இந்தோனேஷியா உள்ளிட்ட வெளிநாடுகளின் 17 செயற்கைக்கோள்களும் இடம் பெற்றுள்ளன.

கடந்த 2008ம் ஆண்டு ஒரே ராக்கெட்டில் 10 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி இஸ்ரோ சாதனை படைத்தது. இந்நிலையில் தற்போது 20 செயற்கைக்கோள்களை விண்ணில் ஒரே நேரத்தில் செலுத்தியதன் மூலம், தனது சாதனையை தானே முறியடித்தது இஸ்ரோ.

பி.எஸ்.எல்.வி. சி34 ராக்கெட்டானது நவீன மோட்டார் கருவி பொருத்தப்பட்ட எக்ஸ்எல் வகையில் 14ஆவது ராக்கெட் ஆகும். இதன் எடை 320 டன். உயரம் 44.4 மீட்டர் என இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ தெரிவித்துள்ளது.

விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி - 34

விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி - 34

இன்று 9.26 மணிக்கு பிஎஸ்எல்வி சி -34 விண்ணில் வெற்றிகரமாக சீறிப்பாய்ந்தது. விண்ணில் செலுத்தப்பட்ட 26வது நிமிடத்தில் 20 செயற்கைகோள்களையும் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தியது. இது இஸ்ரோவின் மிகப்பெரிய சாதனையாகும்.
ஒரே ராக்கெட்டில் செல்லும் செயற்கைக்கோள்களை வெவ்வேறு சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தி புதிய சாதனை படைத்துள்ளது.

கார்ட்டோசாட் 2

கார்ட்டோசாட் 2

பி.எஸ்.எல்.வி. சி34 ராக்கெட் சுமந்து சென்றுள்ள முதன்மை செயற்கைக்கோள் கார்ட்டோசாட் 2-ன் முக்கியப் பணி, பூமியை படமெடுத்து அனுப்புதல், கடற்போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல் ஆகும்.

செயற்கைக் கோள் நிலை நிறுத்தம்

செயற்கைக் கோள் நிலை நிறுத்தம்

இந்த செயற்கைகோளானது பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தச் செயற்கைக்கோளின் எடை 727.5 கிலோ. பூமியிலிருந்து 505 கி.மீ. தொலைவில் இந்த செயற்கைக்கோள் நிலை நிறுத்தப்பட்டது. இதில், 986 வாட் திறன் கொண்ட 2 பேட்டரிகள் உள்பட நவீன கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் ஆயுள் காலம் 5 ஆண்டுகள்.

இந்திய செயற்கைக் கோள்கள்

இந்திய செயற்கைக் கோள்கள்

இந்தியாவின், இந்தியன் பல்கலைக்கழக அகாதெமிக் இன்ஸ்டிடியூட், சென்னை சத்தியபாமா பல்கலைக்கழகத்தை சேர்ந்த சத்யபாம்சாட் (1.5கி), புனே பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த ஸ்வயம் (1கி) ஆகிய 2 செயற்கைக்கோள்களும் விண்ணில் செலுத்தப்பட்டு நிலை நிறுத்தப்பட்டன.

17 வெளிநாட்டு செயற்கைக் கோள்கள்

17 வெளிநாட்டு செயற்கைக் கோள்கள்

இந்தோனேசியாவின் லெபன்-ஏ3 (120 கி), ஜெர்மனியின் பிரோஸ் (130 கி), கனடாவின் எம்3எம்சாட் (85கி), ஜிஎச்ஜிசாட்-டி (25.5 கி), அமெரிக்காவின் ஸ்கைசாட் ஜென்2-1 (110கி), டவ் வகையை சேர்ந்த 12 செயற்கைக்கோள்கள் (ஒவ்வொன்றும் 4.7 கி) என 17 வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டன. அவையும் சற்று முன்னர் விண்ணில் நிலை நிறுத்தப்பட்டன.

குறைந்த செலவு

குறைந்த செலவு

இந்திய விண்வெளி ஆராய்ச்சிக்கழகம் இதுவரை 20 நாடுகளின் 57 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தியுள்ளது. மற்ற நாடுகளின் விண்வெளி ஆய்வு நிறுவனங்களைவிட இஸ்ரோ 10 மடங்கு குறைந்த செலவில் ராக்கெட்டுக்களை விண்ணில் செலுத்துகிறது. இதனால் வெளிநாடுகள் தங்களின் செயற்கைகோள்களை விண்ணிற்கு அனுப்ப இஸ்ரோவை அதிக அளவு நாடி வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன.

English summary
The PSLV-C34 is set to lift the third satellite in the Cartosat-2 series and an Indian record-making 19 small satellites into space at 9.26 a.m. on Wednesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X