For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மீண்டும் விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி - 39 ராக்கெட் - வீடியோ

பிஎஸ்எல்வி சி 39 ராக்கெட்டை வரும் நவம்பர் அல்லது டிசம்பரில் மீண்டும் விண்ணில் ஏவ, இஸ்ரோ முடிவு செய்துள்ளது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

ஸ்ரீஹரிகோட்டா: பி.எஸ்.எல்.வி., ராக்கெட், கடந்த மாதம், விண்ணில் ஏவப்பட்டு தோல்வியில் முடிவடைந்த நிலையில், வரும், நவம்பர் அல்லது டிசம்பரில் மீண்டும், அந்த வகை ராக்கெட்டை விண்ணில் ஏவ, இஸ்ரோ முடிவு செய்துள்ளது.

இஸ்ரோ, ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.,-1 எச் செயற்கைக்கோளை, ஆந்திராவின், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து, 'பி.எஸ்.எல்.வி - சி 39' ராக்கெட் மூலம், ஆகஸ்ட்டில் விண்ணில் செலுத்தியது.

PSLV C39 rocket Will resume launches by November says AS Kiran Kumar

திட்டமிட்ட புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்படாமல், இத்திட்டம் தோல்வியில் முடிந்தது. எனினும், அடுத்த திட்டம், வரும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதங்களில் மேற்கொள்ளப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.

இதுகுறித்து, இஸ்ரோ தலைவர், கிரண் குமார் கூறுகையில், பி.எஸ்.எல்.வி., சி 39 திட்டம் தோல்வியடைந்தது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். இதன் முடிவுகள் அடிப்படையில், அடுத்த திட்டத்தில், இந்த தவறுகள் இல்லாமல் சரி செய்யப்படும்.

ராக்கெட்டில் பிரச்னைகள் ஏதுமில்லை. எனினும், செயற்கைக்கோள் தனியாக பிரிவதில், தொழில்நுட்ப பிரச்சினை இருப்பதை கண்டறிந்துள்ளோம். நவம்பர் அல்லது டிசம்பரில், மீண்டும், பி.எஸ்.எல்.வி., ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என்றார்.

English summary
The Indian Space Research Organisation (ISRO) that is lauded the world over for its commendable space program experienced a minor setback during its latest satellite launch on August 31.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X