For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வன்முறையை தூண்டுகிறது பப்ஜி கேம்… சூரத்தில் நாளை முதல் தடை

Google Oneindia Tamil News

Recommended Video

    போலியோ வழக்கில் முக்கிய நடிகர்களை சேர்க்க உத்தரவு | பப்ஜிக்கு சூரத்தில் நாளை முதல் தடை- வீடியோ

    குஜராத் : குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்தில் நாளை முதல் பப்ஜி கேம் விளையாட காவல்துறை தடை விதித்துள்ளது.

    உயிரை குடிக்கும் ப்ளூவேல் விளையாட்டை மத்திய அரசு தடை செய்தது போல், இளைய தலைமுறையினரை வன்முறைக்கு தூண்டும் பப்ஜி விளையாட்டை தடை செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கை எழுந்துள்ளது.

    Pubg Dangerous Game like bluewale; Ban From Tomorrow In Surat

    அந்த வகையில் , நாட்டிலேயே முதல் முறையாக குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்தில் பப்ஜி கேம் விளையாட்டுக்கு காவல்துறை தடை விதித்துள்ளது.

    போலியோ சொட்டு மருந்து முகாம் வழக்கு... அஜித், விஜய், சூர்யா எதிர்மனுதாரராக சேர்ப்பு போலியோ சொட்டு மருந்து முகாம் வழக்கு... அஜித், விஜய், சூர்யா எதிர்மனுதாரராக சேர்ப்பு

    கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது, இளைய தலைமுறையினரை தன்வசம் கவர்ந்த பப்ஜி கேம். 'பிளேயர்ஸ் அன்நோன் பேட்டில்கிரவுண்ட்' (Player Unknown's Battlegrounds) என்பதன் சுருக்கம் தான் பப்ஜி.

    இது ஒரு இணையதள online விளையாட்டு. இதை மொபைல் போன்களிலும் விளையாடலாம். பப்ஜி விளையாட்டின் செல்வாக்கு மட்டும் அல்ல அதன் மீதான மோகமும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், குழந்தைகளிடையே வன்முறை போக்கு அதிகரித்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இதன் காரணமாக குஜராத் மாநிலம் சூரத்தில் இந்த விளையாட்டிற்கு நாளை முதல் தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை சூரத் காவல் ஆணையர் வெளியிட்டுள்ளார்.

    இதற்கிடையே, மத்திய பிரதேசத்தில் பப்ஜி விளையாட்டில் மூழ்கியிருந்த இளைஞர் ஒருவர் தண்ணீருக்கு பதிலாக பதிலாக அமிலத்தை எடுத்துக் குடித்தார். தற்போது, ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

    English summary
    Gujarat Police has imposed a ban on playing the PUBG Game From tomorrow in Surat district.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X