For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பப்ஜி விளையாட்டுக்கு நாடு முழுக்க அதிரடி தடை.. நேபாளத்தில்

Google Oneindia Tamil News

Recommended Video

    PUBG Banned? | நேபாளத்தில் நாடு முழுவதும் பப்ஜி விளையாட்டுக்கு தடை- வீடியோ

    காத்மாண்டு: பிளேயர் அன்நோன் பேட்டில் கிரவுண்ட்ஸ்.. அதை சுறுக்கமாக சொன்னால் பப்ஜி (PUBG). நமது நாட்டில் இந்த கேம்மை ஆடாத 2K கிட்ஸ் இருக்கவே முடியாது என்னும் அளவுக்கு வெறித்தனமான ரசிகர்களை சம்பாதித்துவிட்டது.

    பப்ஜி விளையாட்டின் ஆகப்பெரும் தீமை என்றால், தொடர்ச்சியாக செல்போனை விட்டு கண்ணை எடுக்க விடாமல் அடிமைப்படுத்தி வைத்திருப்பதும், அதில் காணப்படும் தீவிர வன்முறையும்தான்.

    PUBG game banned in Nepal

    சமீபத்தில் நியூசிலாந்தில் மசூதிகளுக்குள் வலதுசாரி தீவிரவாதிகள் புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்திய காட்சிகளை பார்த்தால், அவையும் பப்ஜி கேம் மூலமாக வெறியேறியவர்களின் செயல் போல உள்ளதாகத்தான் சர்ச்சை எழுந்தது.

    இதையடுத்து, குஜராத் மாநிலத்தில் பப்ஜி விளையாட்டுக்கு கடந்த ஒரு மாதமாக தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து, நேபாளம் நாடு தனது நாடு முழுமைக்கும் பப்ஜி விளையாட்டுக்கு தடை விதித்துள்ளது. வன்முறை மற்றும் எதிர்மறை தாக்கத்தை சிறுவர்களிடம் ஏற்படுத்துவதை காரணமாக கூறி, பப்ஜி ஆட்டத்திற்கு முடிவு கட்டியுள்ளது நேபாள அரசு.

    ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிந்தனை.. செவ்வந்திப் பூக்களாம் தொட்டிலிலே! ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிந்தனை.. செவ்வந்திப் பூக்களாம் தொட்டிலிலே!

    நேபாளத்தின் தொலைதொடர்பு ஒழுங்குமுறையம், அந்த நாட்டிலுள்ள இணையதள சேவை வழங்குவோருக்கு, இதுகுறித்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. இணையதள சேவை வழங்கும் நிறுவனங்கள் இந்த விளையாட்டை தடை செய்யும் பொறுப்பாளர்கள் ஆவார்கள்.

    English summary
    Nepal completely banned the popular online game PUBG citing violent content and negative impact on children.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X