For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நவராத்திரியுடன் தொடர்புபடுத்தி காண்டம் விளம்பரம்.. மீண்டும் சர்ச்சையில் சிக்கிய சன்னி லியோன்

பாலிவுட் நடிகை சன்னி லியோன் நவராத்திரியை தொடர்புபடுத்தி காண்டம் விளம்பரத்தில் நடித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Google Oneindia Tamil News

மும்பை: பாலிவுட் நடிகை சன்னி லியோன் நவராத்திரியை தொடர்புபடுத்தி காண்டம் விளம்பரத்தில் நடித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை சன்னி லியோன் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் பிரதமர் மோடியை விட கூகுளில் அதிகம் தேடப்படும் ஒரு நபர். கவர்ச்சி நடிகையான சன்னிலியோன் அவ்வப்போது ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

அண்மையில் சன்னி லியோன் நடத்திருந்த ஜிஸம் 2 படம் வெளியானது. இதையடுத்து அவரது கொடும்பாவி பல இடங்களில் எரிக்கப்பட்டது. இதுதொடர்பாக அவர் மீது பொது நல வழக்கும் தொடரப்பட்டது.

சர்ச்சையைக் கிளப்பும் விளம்பரம்

சர்ச்சையைக் கிளப்பும் விளம்பரம்

கவர்ச்சிப் புயல் சன்னி லியோன் சினிமாவை தவிர சில விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். சில தினங்களுக்கு முன் இவர் காண்டம் விளம்பரத்தில் நடித்திருந்தார்.

நவராத்திரியுடன் தொடர்புபடுத்தி

நவராத்திரியுடன் தொடர்புபடுத்தி

படு கவர்ச்சியாக உள்ள அந்த விளம்பரம் நவராத்திரியுடன் தொடர்புபடுத்தி ஒளிபரப்பப்படுகிறது. குஜராத் மாநிலத்தின் பல இடங்களில் மேன் ஃபோர்ஸ் எனும் அந்த காண்டத்தை புரமோட் செய்யும் வகையில் விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

நவராத்திரியில் விளையாடுங்கள்..

நவராத்திரியில் விளையாடுங்கள்..

அந்த விளம்பர பலகைகளில் நவராத்திரியில் விளையாடுங்கள்.. ஆனால் அன்புடன்.. என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. கூடவே தாண்டியா குச்சிகளும், கவர்ச்சியாக சன்னி லியோன் பார்ப்பதும் போன்றும் அந்த விளம்பர பலகைகள் உள்ளன. இந்த விளம்பரத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

குவியும் கண்டனங்கள்

குவியும் கண்டனங்கள்

சமூக வலைதளங்களில் மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அனைத்திந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தடை செய்ய கோரிக்கை

தடை செய்ய கோரிக்கை

இதுதொடர்பாக அனைத்திந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில் கலாச்சாரத்தை அவமதிக்கும் இந்த விளம்பரத்தை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

எந்த அளவிற்கும் செல்வார்..

எந்த அளவிற்கும் செல்வார்..

பிராண்ட் தூதரான சன்னி லியோனின் பொறுப்பற்ற செயல் இது என்றும் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். பணம் சம்பாதிப்பதற்காக சன்னி லியோன் எந்த அளவிற்கும் செல்ல முடியும் என்பதை அவரது இந்த விளம்பரம் காட்டியுள்ளதாகவும் அவர்கள் தங்களின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

English summary
Public condemns Sunny leone's condom ad. The righteous citizens are in a righteous uproar. The Confederation of All India Traders has shot off a let to Ram Vilas Paswan, Minister of Consumer Affairs demanding the ad be banned.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X