For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புல்வாமா.. 40 உயிர்கள் பலி.. ஒரு வருடம் ஓடியும்.. விடை தெரியலையே.. வெடிமருந்துகள் எங்கிருந்து வந்தன?

Google Oneindia Tamil News

Recommended Video

    புல்வாமா தாக்குதல்... இன்னமும் விடை தெரியலையே..

    ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த ஆண்டு இதே பிப்ரவரி 14ம் தேதி அன்று தான் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் அதிகாலை நேரத்தில் தற்கொலைப்படை தாக்குதலால் கொல்லப்பட்டனர். ஆனால் புல்வாமா தீவிரவாத தாக்குதல் நடந்து ஒரு வருடம் ஆகிவிட்ட நிலையில், தேசிய புலனாய்வு அமைப்பால் (என்ஐஏ) காரில் இருந்து தற்கொலை குண்டுகளுக்கான உயர் தர வெடிபொருட்கள் எங்கிருந்து கொண்டுவரப்பட்டது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.

    அதிகாலை நேரம் அது. காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் தேசிய நெடுஞ்சாலைலயில் சிஆர்பிஎப் வீரர்களின் ஒரு கேம்ப்பில் இருந்து இன்னொரு கேம்பிற்கு மொத்தமாக சென்று கொண்டிருந்தனர். அப்போது தங்களை நோக்கி மரணம் வரப்போகிறது என்பதை அறியாமல் சிஆர்பிஎப் வீரர்களை அயர்ந்து தூங்கி கொண்டு வந்தனர்.

    ஏற்கனவே தீவிரவாதிகள் தீட்டிய சதிதிட்டப்படி ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதியான ஆதில் அஹ்மத் தார் காரில் உயர்ரக வெடிப்பொருட்களை அதிவேகமாக சென்று சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற பேருந்தில் மோதினான். ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் நடந்த அதி பயங்கர தாக்குதலில், குண்டுகள் வெடித்து சிதறியது. குண்டுகளோடு 40 வீரர்களும் வெடித்து சிதறினர். இந்த கோர சம்பவத்தில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

     புல்வாமா தாக்குதலால் ஆதாயம் அடைந்தது யார்? விசாரணை என்னாச்சு.. ராகுல் நறுக் கேள்வி புல்வாமா தாக்குதலால் ஆதாயம் அடைந்தது யார்? விசாரணை என்னாச்சு.. ராகுல் நறுக் கேள்வி

    இந்தியா கடும் கோபம்

    இந்தியா கடும் கோபம்

    இந்திய அரசு உடனடியாக எதிர்வினை ஆற்றியது. இந்த சம்பவத்திற்கு பாகிஸ்தான் தான் காரணம் என்று கூறி பாகிஸ்தான் எல்லையில் அடுத்த சில வாரங்களில் துல்லிய தாக்குதல் நடத்தியது. இதில் பல தீவிரவாதிகள்கொல்லப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் இதை பாகிஸ்தான் மறுத்தது. எனினும் தாக்குதல் நடந்தது உண்மை தான் என்பதை பாகிஸ்தான் ஒப்புக்கொண்டது.

    இராணுவ குண்டுகள்

    இராணுவ குண்டுகள்

    இதற்கிடையே புல்வாமா தீவிரவாத தாக்குதல் நடந்து ஒரு வருடம் ஆகிவிட்ட நிலையில், தேசிய புலனாய்வு அமைப்பால் (என்ஐஏ) காரில் இருந்து தற்கொலை குண்டுகளுக்கான உயர் தர வெடிபொருட்கள் எங்கிருந்து கொண்டுவரப்பட்டது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. இது தொடர்பாக அரசாங்கத்தின் மூத்த அதிகாரி ஒருவர், கூறுகையில், " அந்த தாக்குதலில் பயன்படுத்தப்பட்டவை "இராணுவக் கிடங்ககுளில் காணப்படும் போர் வெடிமருந்துகள்" என்பதால் வெடிபொருட்களை கடைகள் உள்ளிட்டவற்றில் இருந்து வாங்க முடியாது என்றார்.

    25 கிலோ வெடிமருந்துகள்

    25 கிலோ வெடிமருந்துகள்

    சுமார் 25 கிலோ பிளாஸ்டிக் வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டதாக ஒரு தடயவியல் அறிக்கை கூறியுள்ளது, இந்நிலையில் என்ஐஏ அதிகாரி ஒருவர் இதுபற்றி கூறுகையில், காரில் நிரம்பிய வெடிபொருட்கள் "அம்மோனியம் நைட்ரேட், நைட்ரோ கிளிசரின் மற்றும் ஆர்.டி.எக்ஸ்" வகையைச் சேர்ந்தவை என்றார்.

    எண்கவுண்டரில் பலி

    எண்கவுண்டரில் பலி

    கடந்த ஆண்டு மார்ச் மற்றும் ஜூன் மாதங்களில் பாதுகாப்பு படையினருடன் ஏற்பட்ட மோதலில் புல்வாமா தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு முக்கிய நபர்களான முடசிர் அகமது கான் மற்றும் சஜ்ஜாத் பட் ஆகியோர் கொல்லப்பட்டனர். இதனால் விசாரணையில் பெரும் தடை ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடையதாக கருதப்படும் அனைத்து முக்கிய நபர்களும் இறந்துவிட்டதால் என்ஐஏ குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய முடியவில்லை.

    என்ஏஐ என்ன சொல்கிறது

    என்ஏஐ என்ன சொல்கிறது

    என்ஐஏ வட்டாரங்கள் இது குறித்து கூறுகையில், தற்கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கார் முதன்முதலில் 2011 இல் விற்கப்பட்டது மற்றும் தாக்குதலுக்கு 10 நாட்களுக்கு முன்னர் பிப்ரவரி 4 ஆம் தேதி பட் அதை வாங்குவதற்கு முன்பு பல முறை மறுவிற்பனை செய்யப்பட்டிருக்கிறது. முடசிர் அகமது கான் வெடிபொருட்களை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். வாகனத்தின் "என்ஜின் தடுப்பு" வெடித்துச் சிதறியதால் அதை மீட்டெடுக்க முடியவில்லை, மேலும் வெடிப்பு நடந்த இடத்திற்கு அருகில் ஆற்றில் விழுந்த பின்னர் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம்.

    சதிதிட்டம் தெரியவில்லை

    சதிதிட்டம் தெரியவில்லை

    பல பதிலளிக்கப்படாத கேள்விகள் உள்ளன, ஏனெனில் விசாரணையை ஒன்றிணைக்க உதவிய அனைத்து குற்றவாளிகளும் என்கவுண்டர்களில் கொல்லப்பட்டனர். தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட கார் பல முறை கைகளை மாற்றிவிட்டது. வாகனத்தை கடைசியாக வைத்திருந்த நபர்- சஜ்ஜாத் பட் பிடிபடுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு ஜெய்ஷு முகமது அமைப்பில் சேர்ந்தார். பின்னர் அவர் ஒரு என்கவுண்டரில் கொல்லப்பட்டார். சந்தேகநபர்கள் யாரும் உயிருடன் இல்லாததால் இந்த வழக்கில் சேகரிக்கப்பட்ட தொழில்நுட்ப ஆதாரங்களை உறுதிப்படுத்த முடியாததால் சதித்திட்டத்தை யார் செய்தது. எப்படி வெடிமருந்தை கொண்டுவந்தார்கள் என்பதை நிரூபிப்பது கடினம் என்றார்கள்.

    English summary
    Pulwama terror attack where 40 CRPF personnel were killed: Even after a year, NIA unable to trace source of explosives used by the car-borne suicide
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X