For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிரியங்கா தான் காங். தலைவராக வரணும்.. பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சொல்லும் மாஸ் காரணம்

Google Oneindia Tamil News

Recommended Video

    Amarinder supports Priyanka | பிரியங்கா தான் தலைவராக வரணும்: அமரீந்தர் சொல்கிறார்- வீடியோ

    அமிர்தசரஸ்: பிரியங்கா காந்தி வதேராவுக்கு தேசத்தின் தேவைகளை புரிந்து கொள்ளவும், எந்த ஒரு சாவலையும் ஏற்றுக்கொள்ளும் தைரியமும் புத்திசாலித்தனமும் இருப்பதால் அவரை காங்கிரஸ் தலைவராக நியமிக்க வேண்டும் என பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் வலியுறுத்தியுள்ளார்.

    காங்கிரஸ் கட்சி நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் 52 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. முன்னதாக 2014ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் 44 இடங்களில் மட்டுமே வென்றது. இதனால் வேதனை அடைந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தோல்விக்கு பொறுப்பு ஏற்று தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.

    ஆனால் காங்கிரஸ் காரிய கட்டி இதுவரை ராகுலின் ராஜினாமாவை ஏற்கவில்லை. எனினும் ராகுல் காந்தி புதிய தலைவரை தேர்வு செய்து கொள்ள வேண்டும் என காஙகிரஸ் காரிய கமிட்டிக்கு வலியுறுத்தி உள்ளார்.

    காங்.தலைவர்கள் ஆதரவு

    காங்.தலைவர்கள் ஆதரவு

    இதையடுத்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுலின் சகோதரி பிரியங்கா காந்தி வதேராவை காங்கிரஸ் தேசிய தலைவராக நியமிக்க வேண்டும் என கோரிக்கை வைக்க ஆரம்பித்துள்ளனர்.

    சிறந்த தேர்வு

    சிறந்த தேர்வு

    அண்மையில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான சசிதரூர், பிரியங்கா காந்தி காங்கிரஸ் தலைவர் பதவிக்கு சிறந்த தேர்வாக இருப்பார் என வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தார்.

    தைரியம் உள்ளவர்

    தைரியம் உள்ளவர்

    இந்நிலையில் தற்போது பஞ்சாப் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமாகிய கேப்டன் அமரீந்தர் சிங் பிரியங்கா காந்திக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், லோக்சபா தேர்தலுக்கு பின்னர் காங்கிரஸை மறுகட்டமைக்க இளம் திறமை வாயந்த ஒருவர் தலைவராக தேவை. பிரியங்கா காந்திக்கு தேசத்தின் தேவைகளை புரிந்து கொள்ளவும், எந்த ஒரு சாவலையும் ஏற்றுக்கொள்ளும் தைரியமும் புத்திசாலித்தனமும் இருக்கிறது. எனவே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ராஜினாமாவை திரும்ப பெறாவிட்டால் பிரியங்கா காந்தி தான் தலைவர் பதவிக்கு சிறந்த தேர்வு என்றார்.

    பாஜக கிண்டல்

    பாஜக கிண்டல்

    காங்கிரஸ் செய்தி தொடர்பான மனிஷ் திவாரியும் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அவரை காங்கிரஸ் தலைவராக நியமிக்க வேண்டும் என ஆதரவு தெரிவித்துள்ளார். இதனிடையே பாஜக காங்கிரஸ் கட்சியை மூழ்கும் கப்பல் என விமர்சித்துள்ளது. பிரியங்கா காந்தி கிழக்கு உத்தரப்பிரதேசத்திற்கு பொறுப்பு ஏற்றதையும் அங்கு காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததையும் சுட்டிக்காட்டி இவரா தலைமை பொறுப்புக்கு என்று கிண்டல் செய்து பஞ்சாப் பாஜக தலைவர் ஸ்வைத் மாலிக் விமர்சித்துள்ளார்.

    English summary
    Punjab cm Amarinder Singh supports Priyanka Gandhi for Congress president post. he said Priyanka Gandhi Vadra has the intelligence and instinct to understand and relate to the needs of the nation.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X