For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மோகா துயரம் - ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான விசாரணைக் குழு அமைத்தது பஞ்சாப் அரசு

Google Oneindia Tamil News

சண்டிகார்: பஞ்சாப்பில் மோகா பலாத்கார சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான விசாரணைக் குழுவினை பஞ்சாப் அரசு நியமித்துள்ளது.

பஞ்சாப் மாநிலம் மோகா என்ற இடத்தில் தனியார் பேருந்தில் பயணம் செய்த தாய் மற்றும் மகளுக்கு பேருந்தின் கண்டக்டர் மற்றும் உதவியாளர் பாலியல் தொந்தரவு கொடுத்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இருவரையும் பேருந்தில் இருந்து வெளியே தள்ளிவிட்டனர். இதில் சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தாய் படுகாயம் அடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பஸ்சின் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யவேண்டும் என்றும் வழக்கை சி.பி.ஜக்கு மாற்றவேண்டும் என்றும் வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வந்தன.

இந்த நிலையில் பஞ்சாப் அரசு இச்சம்பவம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற மூத்த நீதிபதி வி.கே பாலி தலைமையில் விசாரணை குழு ஒன்றை நியமித்து உள்ளது. மோகா சம்பவம் குறித்து விசாரணை செய்து 2 மாதங்களில் அறிக்கையை சமர்ப்பிக்கும் படி இந்த விசாரணை குழுவுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

English summary
Punjab government on Tuesday appointed retired Kerala high court chief justice VK Bali to enquire into the death of 13-year-old Moga girl, who was pushed out of a moving bus belonging to Punjab deputy chief minister Sukhbir Badal`s firm Orbit Aviation last week.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X