For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாய் வளர்க்கப் போறீங்களா.. பதிவு செய்து விட்டு வரியையும் கட்டுங்க.. லூதியானாவில்!

Google Oneindia Tamil News

லூதியானா: நாய் வளர்க்க விரும்புவோர் நாயின் புகைப்படத்துடன் பதிவு செய்து வரியும் செலுத்த வேண்டும் என பஞ்சாபில் உள்ள லூதியானா கார்ப்பரேஷன் அறிவித்துள்ளது.

செல்லப்பிராணியாக மட்டுமில்லாமல் பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்களில் மனிதர்களுக்கு உற்ற நண்பனாக இருப்பவை நாய்கள். எனவே, தான் மக்கள் அதிகளவில் தங்கள் வீடுகளில் நாய்கள் வளர்க்க விரும்புகின்றனர்.

இந்நிலையில், பஞ்சாபில் உள்ள லூதியானா மாவட்டத்தில் நாய் வளர்க்க விரும்புவோர் வரி செலுத்த வேண்டும் என அறிவிக்கப் பட்டுள்ளது.இது குறித்து அம்மாவட்ட கார்ப்பரேஷன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

புகைப்படத்துடன் பதிவு...

புகைப்படத்துடன் பதிவு...

நாயின் புகைப்படம் மற்றும் அதன் விவரங்களுடன் கூடிய விண்ணப்பத்தை, கார்ப்பரேஷனின் சுகாதார பிரிவில் அளித்து பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த பதிவு ஓராண்டுக்கானது.

வரி...

வரி...

இதற்காக, 250 ரூபாய் வரியாக செலுத்த வேண்டும். ஆண்டுதோறும், இந்த பதிவை புதுப்பிப்பதுடன், வரியையும் செலுத்த வேண்டும். தவறினால், 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

நாய் விற்பவர்கள்...

நாய் விற்பவர்கள்...

நாய் விற்பனையில் ஈடுபட்டுள்ளவர்கள், தாங்கள் விற்பனை செய்யும் நாய் இனங்களை பதிவு செய்து, கட்டணமாக, 2,000 ரூபாய் செலுத்த வேண்டும். இந்த பதிவையும் ஆண்டுதோறும் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

இந்த பதிவுக்கான விதிமுறைகள்:

இந்த பதிவுக்கான விதிமுறைகள்:

2 வயதான நாய்களுக்கு தடுப்பூசி போட வேண்டும். நாய் அண்டை வீட்டில் நுழைந்து அவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால், நாயின் உரிமையாளர் பொறுப்பேற்க வேண்டும்.

நோட்டீஸ்...

நோட்டீஸ்...

தெருவில் சுற்றி திரியும் நாய்களை கார்ப்பரேஷன் பிடித்து செல்லும். அண்டை வீட்டார் புகார் அளித்தால், நாயை கட்டுபடுத்த, 'நோட்டீஸ்' அனுப்பப்படும். கட்டுப்படுத்தாவிட்டால், நாள் ஒன்றுக்கு, 10 ரூபாய் வீதம் அபராதம் விதிக்கப்படும்.

சட்டப்படி நடவடிக்கை...

சட்டப்படி நடவடிக்கை...

விசாரணையின்போது, வெறிநாய் பிடிபட்டால், உரிமையாளருக்கு, 'நோட்டீஸ்' அளிப்பதுடன் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். பொது இடங்களில் விளையாட்டுகளில் நாய்களை ஈடுபடுத்த வேண்டுமென்றால், அதற்காக தனி உரிமம் பெற வேண்டும்.அடுத்த வாரம், முதல் இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது.

English summary
The Ludhiana Corporation in Punjab has announced that those who wants to have dogs at their home should be tax.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X