For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஹரியானா சட்டசபையில் நிர்வாண துறவி ஆவேச பேச்சு.... பலாத்காரத்தைத் தடுக்க 'அட்வைஸ்'

By Mathi
Google Oneindia Tamil News

சண்டிகர்: ஹரியானா மாநில சட்டசபையில் நிர்வாண துறவி சாகர் பங்கேற்று பாலியல் பலாத்காரம் தொடர்பாக அறிவுரைகளை வழங்கிய சுவாரசிய சம்பவம் நடைபெற்றுள்ளது.

ஹரியானா சட்டசபையில் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. இதை தொடர்ந்து சட்டசபையில் ஜெயின் மத தலைவரும் துறவியுமான தருண் சாகர் கலந்து கொண்டு 40 நிமிடம் உரையாற்றினார்.

Purifying Politics: Jain Monk Addresses Haryana Assembly

இவரது உரையை ஆளுநர், முதல்வர் மற்றும் எம்.எல்.ஏக்கள் அனைவரும் கட்சி பாகுபாடு இல்லாமல் கேட்டனர்.

துறவி சாகர் பேசியதாவது:

அரசியலில் நேர்மையின் கட்டுப்பாடு அவசியமாக உள்ளது. அரசியல் என்பது மனைவி, நேர்மை என்பது கணவன்.

ஒவ்வொரு கணவனுக்கும் மனைவியை காப்பாற்றும் கடமை உள்ளது. ஒவ்வொரு மனைவியும் கணவனிடம் ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்டிய கடமை உள்ளது.

அரசியலில் தற்போது நேர்மை இல்லை. இது யானை கட்டுபாட்டை மீறியது போல் உள்ளது.

பெண்சிசு கொலை என்பது மிகப்பெரிய பிரச்சினை... இது சமூகத்தின் சம நிலையை குழப்புகிறது.

குற்றங்கள் மற்றும் பாலியல் பலாத்காரங்களை குறைக்க அரசியல், சமூகம், மதங்கள் ஆகியவற்றில் புதிய கொள்கையைக் கொண்டுவரவேண்டும்.

இவ்வாறு துறவி சாகர் பேசினார்.

English summary
Jain monk and religious leader Tarun Sagar gave a 40-minute speech in the Haryana state assembly on Friday afternoon.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X