For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கேதார்நாத்துக்கு நடந்து போனது ஏன்?... ராகுல் தரும் உருக்கமான விளக்கம்!

Google Oneindia Tamil News

கேதார்நாத்: உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்தில் கடந்த 2013ம் ஆண்டு பயங்கர வெள்ளத்தில் சிக்கி மடிந்து போன மக்களை நினைவு கூறும் வகையிலும், அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையிலுமே தான் நடந்து போனதாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

ஓய்விலிருந்து திரும்பி வந்து டெல்லியைக் கலக்கிய ராகுல் காந்தி திடீரென நேற்று கேதார்நாத்துக்குப் புறப்பட்டுச் சென்றார். இன்று அவர் கேதார்நாத் கோவிலில் சிவபெருமானுக்கு வழிபாடுகள் நடத்தி பூஜை செய்தார்.

Purpose Of Visiting Kedarnath On Foot Was To Pay Respect To People Who Died During 2013 Floods: Rahul

கோவிலுக்கு அவர் நடந்து வந்து தரிசனம் செய்தார். இது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. இதுகுறித்து கோவிலுக்கு வெளியே செய்தியாளர்கள் ராகுல் காந்தியிடம் கேட்டனர். அதற்கு அவர் பதிலளிக்கையில், நான் கடவுளிடம் எந்தக் கோரிக்கையும் வைக்கவில்லை. நான் கோவிலுக்கு நடந்து வந்தது பெரிய விஷயம் இல்லை.

கடந்த 2013ம் ஆண்டு கேதார்நாத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பல ஆயிரம் பேர் உயிரிழந்தனர். அந்த மக்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் அவர்களை நினைவு கூறும் வகையிலேயே நடந்து வந்தேன் என்றார் ராகுல் காந்தி.

இன்று காலை எட்டரை மணிக்கு கோவிலுக்கு வந்த ராகுல் காந்தி அங்கு சிவலிங்கத்தை தரிசித்து வணங்கி வழிபட்டார்.

English summary
Congress Vice President Rahul Gandhi reached the revered ancient Kedarnath shrine in the lower Himalayas on Friday morning. He said that his purpose of visiting Kedarnath on foot was to pay respect to those who died during the 2013 flash floods in Uttarakhand. When quizzed if he asked for anything, he said that he never ask for anything in prayers. As per reports, the Congress vice president entered inside the sanctum sanctorum and offered prayers at the holy shrine after the chief priest opened the doors of the ancient temple around 8.30 am for devotees to offer prayers to 'Lord Shiva'.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X